செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....
அன்பு
செவிலிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்.....
அன்பு நண்பர் *திரு.ராஜாராமின்*இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.....
செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....
*தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என உணராத இயல்பினளாம் எங்கள் தாய்*
என்கிறார் பாரதி நம் தாய்மொழியை....
அதுபோல் நம் செவிலியமும் தொன்மையானது....
நைட்டிங்கேல் அம்மையார் நர்சிங் கண்டுபிடிப்பதற்கு முன்பே *செவிலிதாய்* என பண்டைய இலக்கியங்களில் காணப்படுகிறது....
செவிலி அவர் பண்புகள் என வாழ்வியல் நெறியாக காணப்படுகிறது....
பெண்களை அவர்கள் நால்வகை படுத்தினர்....
*தலைவி*
*தோழி*
*நற்றாய்*
*செவிலி*
தமிழ் இலக்கணம் வரையறுத்த *தொல்காப்பியம்*
களவியல், கற்பியல் என இரு இயல்களில் செவிலியின் சிறப்புகளை எடுத்து சொல்கிறது.....
*ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனெபடுவாள் செவிலியாகும்*
நல்ல பெரிய சிறப்புடைய அறிதற்குரிய மறைபொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாயெனப்படுவாள் செவிலியாகும்.....
*கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் செவிலிக்குரிய ஆகும்*
இறந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவை ஆகும் என்கிறது தொல்காப்பியம்....
*குழந்தை பராமரிப்பு*
*வெறி உற விரிந்த** *அறுவை மெல்லனை*
*புன்று நாறு* *செவிலியோடு* *புதல்வன் துஞ்ச*
*ஐயவி அணிந்த* *நெய்யாட்டு ஈரணிப் பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கை சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருத்த*
நறுமணம் உண்டாக விரித்திருந்த நூலாடை மெல்லிய படுக்கையில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலி அருகில் தூங்குகிறான் .தலைவியின் மகன் செவிலித்தாய் அருகில் தூங்குகிறான் என கூறப்படுகிறது.....
செவிலியின் சிறப்பை போற்றும் தொல்காப்பியர் தாய் என சிறப்பித்து சொல்லப்படுபவள் செவிலி ஆகும் என்கிறார்...
*தோழிதானே செவிலியது மகளே*
கம்பராமாயணத்தில் அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் எல்லோருக்கும் தெரியும்..ஆனால் நமக்கெல்லாம் அதற்கடுத்த பாட்டுதான் சிறப்பு
ராமன்மேல் காதல் கொள்கிறாள் சீதை அதனால் அவள் உடல் வெப்பமுறுகிறது அதனை தணிக்க செவிலியர், தாதியர் (ANM), தாயர் (MAT ASST)தவ்வையர் (HEALTH WORKER)
உதவி செய்கின்றனர்...
*தாதியர் செவிலியர் தாயர்* *தவ்வையர் மாதுயர் உழந்து உழந்து அடங்கி மகிழ்கின்றனர்*
*யாது கொல இது?என எண்ணல் தேற்றினர் போதுடன் அயினி நீர் சுழற்றி போற்றினர்*
அதுபோல உலகபொதுமறையாம் திருக்குறள்
*அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் செல்வ செவிலியால் உண்டு*
என்கிறது...இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.. அடுத்த வாரமும் தொடர்வோம்....
நன்றி...
*பா.மணிகண்டன்*
*மாநில துணைத்தலைவர்*
*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்*
*திருநெல்வேலி*
(வரும் வாரங்களில் தொடரும்)

Comments
Post a Comment