Posts

Showing posts from June, 2018

part 4....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

*10. தேர்தல் :* *(1) பொது விதிகள் :* *>* சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் சம உரிமை உள்ளது. *>* மாநில சங்கத்திற்கு ஒவ்வொரு *மூன்று ஆண்டுகளுக்கு* ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும். *(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* *முந்தைய அத்தியாயங்களில், பல இடங்களில் மாற்றத்திற்கான முக்கியத்துவம் அறிந்து அதனை மாற்ற வேண்டும் என்று கூறினேன். இந்த இடத்தில் மாற்றம் கண்டிப்பாக கூடாது என்பதை வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த சங்கத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. மூன்று அணிகளின் முக்கிய தேர்தல் வாக்குறுதியே "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும்" என்பது. அதிலிருந்தே உங்களுக்குப் புரியும் இதன் முக்கியத்துவம் என்னவென்பது.* *நம் செவிலியர்களில் இன்னும் எத்தனையோ வேலு நாச்சியார்களும், ராணி லட்குமிபாய்களும், ஜான்சி ராணிகளும், ராணி மங்கம்மாக்களும், ஏன் எலிசபெத் மகாராணிகளும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் பொழுதுதான் அவர்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கொடுத்துப...