part 4....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி
*10. தேர்தல் :*
*(1) பொது விதிகள் :*
*>* சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் சம உரிமை உள்ளது.
*>* மாநில சங்கத்திற்கு ஒவ்வொரு *மூன்று ஆண்டுகளுக்கு* ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* *முந்தைய அத்தியாயங்களில், பல இடங்களில் மாற்றத்திற்கான முக்கியத்துவம் அறிந்து அதனை மாற்ற வேண்டும் என்று கூறினேன். இந்த இடத்தில் மாற்றம் கண்டிப்பாக கூடாது என்பதை வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த சங்கத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. மூன்று அணிகளின் முக்கிய தேர்தல் வாக்குறுதியே "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும்" என்பது. அதிலிருந்தே உங்களுக்குப் புரியும் இதன் முக்கியத்துவம் என்னவென்பது.*
*நம் செவிலியர்களில் இன்னும் எத்தனையோ வேலு நாச்சியார்களும், ராணி லட்குமிபாய்களும், ஜான்சி ராணிகளும், ராணி மங்கம்மாக்களும், ஏன் எலிசபெத் மகாராணிகளும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் பொழுதுதான் அவர்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க முடியும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செயல்பாட்டுத் திறன், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் சிந்தனைகள் இருக்கும். அவையெல்லாம் நம் செவிலியத்துறையின் முன்னேற்றத்திற்கு பயன்பட, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கண்டிப்பாக தேர்தல் நடைபெற வேண்டும்.*
*நாட்டின் பிரதமரே ஆனாலும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை சந்திக்க வேண்டும்..! அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இதனை மாற்ற முயல்வதில்லை. நாம் என்ன அவர்களை விட மேலானவர்களா..!? எனவே சங்கத்தின் இந்த மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பதில் , மாற்றம் என்பது தேவையற்றது. ஆளுக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொண்டிருந்தால் சங்கத்தின் உறுதித்தன்மை குலைந்துவிடும். எனவே சங்க உறுப்பினர்கள் இவ்விசயத்தில் சிந்தித்து, தெளிவுடன் செயல்படும்படி வேண்டிக் கொள்கிறேன்.)*
*>* கிளைச் சங்கங்களுக்கு ஒவ்வொரு *இரண்டாண்டுகளுக்கு* ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* மேற்சொன்ன கருத்து கிளைச் சங்கத்திற்கும் பொருந்தும்)
*>* தபால் வழி மூலமே ஓட்டளிக்கப்பட வேண்டும்.
*>* அனைத்து சங்க நிர்வாகிகளுக்குமான தேர்தல், *தேர்தல் அலுவலர்* மூலமாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
*>* *மாநில செயற்குழுவானது* தேர்தல் அலுவலரை பணியமர்த்த வேண்டும்.
*>* தேர்தல் அலுவலர், குறிப்பிட்ட தேர்தல் நாளுக்கு *ஒரு மாதத்திற்கு* முன்பாக வேட்பாளர் பட்டியல் கேட்டுப்பெற வேண்டும்.
*>* வேட்பாளர் மனுவை ஆய்வு செய்தல், மனுவை திரும்பப் பெறுதல், மற்றும் மனுவை நிராகரித்தல் முதலியன தேர்தல் நாளுக்கு *15 நாட்கள்* முன்பாக நடைபெற வேண்டும்.
*>* வாக்குச் சீட்டுகள், தேர்தல் நாளுக்கு *ஒரு வாரத்திற்கு* முன்பாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* தேர்தலில் யாருடைய உள்ளீடும் இல்லாமல், உறுப்பினர்கள் சுயசிந்தனையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் தபால் வாக்கு வைத்துள்ளனர்.. ஒரு வாரத்திற்கு முன்பாக உறுப்பினர்கள் கைகளில் வாக்கு சீட்டினை கொடுத்து, அவர்கள் மனநிலையில் வாக்களிக்க, அனுமதிக்க வேண்டும். இன்று மாநிலத் தலைமைக்கு மட்டுமன்று, கிளைச் சங்கத் தேர்தலில் கூட செவிலியக் கண்காணிப்பாளர்களின் (சிலர்) தலையீடும், நெருக்கடியும் இருந்து கொண்டுதானிருக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.)
*>* ஒரு வேளை வாக்கு எண்ணிக்கையின் போது, பதிவான வாக்குகள் *சம எண்ணிக்கையில்* இருந்தால், மாநில சங்கத் தேர்தலானால் *தலைவரும்*, கிளைச் சங்கத் தேர்தலானால் *துணைத் தலைவரும்* பொது வாக்குடன் *கூடுதலாக ஒரு வாக்களித்து* நிர்வாகியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
*>* தேர்தல் முடிந்த *இரண்டு நாட்களுக்குள்*, தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
*>* தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சங்க நிர்வாகிகளும் அடுத்த தேர்தல் வரை பதவியில் இருப்பர்.
*>* ஒரு தேர்தலுக்கும், மற்றொரு தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாகும் காலிப் பதவியிடங்கள் *செயற்குழுவினால்* நிரப்பப்படும். அது காலியிடத்திற்கு தகுந்தார்போல் ஒருவராகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவராகவோ இருக்கலாம்.
*>* செயற்குழுவில் ஏற்படும் காலிப் பதவியிடங்கள், *மாநில செயற்குழு* எனில் *மாநிலத் தலைவர்* அவர்களாலும், *மாவட்ட செயற்குழு* எனில் *மாவட்ட துணைத் தலைவர்* அவர்களாலும் சங்கத்தின் சாதாரண உறுப்பினர்களிலிருந்து நிரப்பப்பட வேண்டும்.
*>* தேர்தல் நடைமுறை மற்றும் தேர்தல் முடிவுகள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரால், சங்க உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக வெளியிடுதல் வேண்டும்.
*>* பதவிக்காலம் முடிந்த நிர்வாகிகள் மீண்டும் தேர்தலில் நிற்கலாம்.
*>* கிளைச்சங்க செயற்குழு உறுப்பினர், மாநில செயற்குழு தேர்தலில் போட்டியிட எவ்வித தடையுமில்லை. ஒருவேளை மாநிலத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு பதவிகளையும் வைத்துக் கொண்டு செயல்படலாம்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* கிளைச் சங்கம் மற்றும் மாநில சங்கம் இரண்டிலும் பதவி வைத்து செயல்படுவதற்கு பதிலாக, ஏதேனும் ஒரு பதவியை சங்க ஈடுபாடுள்ள வேறொரு உறுப்பினருக்கு கிடைப்பதற்கு ஏதுவாக விட்டுக் கொடுக்கும் பட்சத்தில், மற்ற உறுப்பினர்களுக்கும் அது ஒரு ஊக்கமாக இருக்கும். எனவே ஒரு பதவியில் இருப்பவர், இன்னொரு பதவிக்கான தேர்தலில் வெற்றி பெரும் பட்சத்தில், இரண்டில் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.)
*சங்கத் தேர்தல் தொடர்பான சிறப்பு விதிகள், மாநில செயற்குழுவின் பணி மற்றும் அதிகாரம்...*
தொடர்வோம்...!!
*12. சிறப்பு விதிகள் :*
*(அ) மாநில சங்கத் தேர்தல் :*
*>* தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர்களை உள்ளடக்கிய மாநில செயற்குழுவிற்கான தேர்தலானது , நகரத்திலுள்ள சங்க உறுப்பினர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
*>* இத்தேர்தலில் மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.
*>* வாக்காளர்கள் தங்களது வாக்குச்சீட்டை, தபால் மூலமாகவே தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
*>* அனைத்து மாநில சங்க நிர்வாகிகளின் ஒப்புதலோடு, பொதுச் செயலாளரானவர் இரண்டு துணைச் செயலாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* மாநில செயற்குழு தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், பொது செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கட்டாயமாக நகரத்திலுள்ள உறுப்பினர்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நமது சங்கத் தனிநிலை விதி கூறுகிறது. இதில் நகரமென்பது சென்னை மாநகரத்தை குறிக்கும்.
ஆனால் இந்த விதி சங்கத்தின் தேர்தல் பொதுவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள, *'சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் சம உரிமை உள்ளது',* என்ற விதிக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது. மேலும் பல ஆண்டுகளாகவே நமது சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். எனவே மாநில நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத்தின் அனைத்து உறுப்பினர்களும் போட்டியிட தகுதியுள்ளவர்கள் என்று மாற்றம் கொண்டு வரவேண்டும்.
இரண்டாவதாக, மாநில துணைச் செயலாளர்கள் இருவரை மாநில நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதலோடு, பொதுச் செயலாளர் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சங்கத் தனிநிலை விதி கூறுகிறது. எனவே துணைச் செயலாளர் பதவிக்கு தேர்தல் தேவையற்றது என்பது என்னுடைய கருத்து.)
*(ஆ) கிளைச் சங்க தேர்தல் :*
துணைத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய கிளைச் சங்கத்திற்கான தேர்தலானது , மாவட்ட தலைமையகத்திலுள்ள சங்க உறுப்பினர்களிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
*>* இத்தேர்தலில் மாவட்டம் முழுவதிலுமுள்ள அனைத்து உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* கிளைச் செயற்குழு தேர்தலில் துணைத் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் கட்டாயமாக மாவட்ட தலைமையகத்திலுள்ள உறுப்பினர்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நமது சங்கத் தனிநிலை விதி கூறுகிறது.
ஆனால் இந்த விதி சங்கத்தின் தேர்தல் பொதுவிதியில் குறிப்பிடப்பட்டுள்ள, *'சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் சம உரிமை உள்ளது',* என்ற விதிக்கு முற்றிலும் முரண்பாடாக உள்ளது.
எனவே மாவட்ட கிளைச் சங்க நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத்தின் அனைத்து உறுப்பினர்களும் போட்டியிட தகுதியுள்ளவர்கள் என்று மாற்றம் கொண்டு வரவேண்டும்.)
*(இ) மாநில செயற்குழு மற்றும் கிளைச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் :*
*>* மாவட்ட கிளைச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள், அவர்களுக்கு தகுதியான செயற்குழு உறுப்பினர்களை மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்ய வேண்டும்.
*>* மேலும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை மாநில (செயற்குழு) தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
*>* கிளைச் சங்க செயற்குழு உறுப்பினர்களும், கிளைச் சங்க பொதுக்குழு கூட்டத்தில்தான் தேர்வு செய்யப்பட வேண்டும்.
*>* நகர கிளைச் சங்க உறுப்பினர்களிலிருந்து, மாநில செயற்குழு உறுப்பினர்களானவர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.
*>* மாநில செயற்குழுவின் தலைவர், கூடுதலாக 5 உறுப்பினர்களை மாநில செயற்குழுவிற்கும், 2 உறுப்பினர்களை கிளைச் சங்க செயற்குழுவிற்கும் நியமிக்க அதிகாரம் படைத்தவர்.
*மாநில செயற்குழுவின் பணிகளும், அதிகாரங்களும்...
*12.(a) மாநில செயற்குழுவின் பணிகளும், அதிகாரங்களும்..,*
*>* மாநில செயற்குழுவானது குறைந்தது *3 மாதத்திற்கு* ஒரு முறையாவது கூட வேண்டும். மேலும் அந்த வருடத்தின் கடைசி செயற்குழு கூட்டத்தின் போது, அந்த வருடத்தின் ஆண்டு அறிக்கையையும், தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்குகளையும் ஏற்பு செய்ய வேண்டும்.
*>* செயற்குழு கூட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும், அதற்கென்று உள்ள ஒரு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.
*>* எந்தவொரு செயற்குழு கூட்டத்திற்கும், கூட்டம் நடத்த குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* சங்கம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1532. நாம் ஏற்கனவே படித்தோம் ஒவ்வொரு 50 உறுப்பினர்களுக்கும் ஒரு மாநில செயற்குழு உறுப்பினர் பதவியிலமர்த்தப்பட வேண்டுமென்று. அப்படியானால் அந்தக் காலத்தில் இருந்த மொத்த மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநில நிர்வாகிகள்19 + மாநில செயற்குழு உறுப்பினர்கள்31, ஆக மொத்தம் 50 பேர். இந்த 50 உறுப்பினர்களில் 15பேர் என்பது மூன்றில் ஒரு பங்கு.
இன்று நம் சங்கத்தின் உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15,000 பேர். இத்தனை உறுப்பினர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் இன்று 300 பேர் இருக்க வேண்டும்(?). எனில் இன்றைய நாளில் ஒரு முடிவெடுக்க மாநில செயற்குழு கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும்.)
*>* மாநில செயற்குழுவானது கீழ்காணும் *துணை நிலைக் குழுக்களை* கொண்டதாக இருக்கும்.
*1.தணிக்கை குழு:*
*>* தணிக்கைக் குழுவானது *3 நபர்களை* உள்ளடக்கியிருக்க வேண்டும்.
*>* குழுவின் ஒரு நபர் *மாநில செயற்குழுவினால்* தேர்வு செய்யப்பட வேண்டும்.
*>* இரண்டு பேர், *சங்கத்தின் அடிப்படை உறுப்பினர்களால்* தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
*2. ஆலோசனைக் குழு :*
பணி சார்ந்த ஆலோசனைக் குழு *5 நபர்களை* உள்ளடக்கியிருக்கும். செவிலியத்துறையின் அனைத்து நிலையிலுள்ள செவிலியர்களும் இக்குழுவில் பிரதிநிதித்துவம் பெறுவர். இக்குழுவானது கீழ்காணும் வரிசையில் நியமிக்கப்படுவர்.
*செவிலியர்கள் - 2*
*தலைமை செவிலியர் - 1*
*செவிலிய போதகர் - 1*
*செவிலியக் கண்காணிப்பாளர் - 1*
ஆக மொத்தம் 5 பேர்.
*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* இதில் செவிலிய போதகர்கள் தனி சங்கம் அமைத்துக் கொண்டதால், அந்த இடத்தில் *செவிலியக் கண்காணிப்பாளர் - நிலை 2* அவர்களையும், அதற்கடுத்தார்போல் செவிலியக் கண்காணிப்பாளர் -நிலை 1 அவர்களையும் பதவியிலமர்த்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.)
*>* மேற்கண்ட இரண்டு குழு அமைப்பிற்கான தேர்தலானது *3 ஆண்டுகளுக்கு ஒருமுறை*, மாநில செயற்குழு தேர்தலுக்கு முந்தைய, கடைசி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
*>* சங்கத்தின் பொது நிதியில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்படாமல் இருக்கும் செலவினங்களை மேற்கொள்ள மாநில செயற்குழுவிற்கு அதிகாரமுள்ளது. அதற்கு மேல் செலவு செய்ய பொதுக்குழுவில் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும்.
*>* அனைத்து சிறப்பு குழுக்களும் அல்லது பிரதிநிதிகளும் மாநில செயற்குழுவால் உருவாக்கப்பட வேண்டும்.
*> மாநில செயற்குழுவானது இந்த சட்ட அமைப்பிற்கு உட்பட்டு, மாநில நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கவோ அல்லது அவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவோ செய்யும்.*
(மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தையும் நம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் செயல்படவும்..)
*மாநில செயற்குழுவின் நிர்வாகிகளின் பணிகள் குறித்த தகவல்...*
தொடர்வோம்...!!
அடுத்த பகுதியில்...
நன்றி..!!
ச.பால்பாண்டியன்.

Comments
Post a Comment