அன்பு செவிலிய சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்..... அன்பு நண்பர் *திரு.ராஜாராமின்*இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்..... செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை.... *தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என உணராத இயல்பினளாம் எங்கள் தாய்* என்கிறார் பாரதி நம் தாய்மொழியை.... அதுபோல் நம் செவிலியமும் தொன்மையானது.... நைட்டிங்கேல் அம்மையார் நர்சிங் கண்டுபிடிப்பதற்கு முன்பே *செவிலிதாய்* என பண்டைய இலக்கியங்களில் காணப்படுகிறது.... செவிலி அவர் பண்புகள் என வாழ்வியல் நெறியாக காணப்படுகிறது.... பெண்களை அவர்கள் நால்வகை படுத்தினர்.... *தலைவி* *தோழி* *நற்றாய்* *செவிலி* தமிழ் இலக்கணம் வரையறுத்த *தொல்காப்பியம்* களவியல், கற்பியல் என இரு இயல்களில் செவிலியின் சிறப்புகளை எடுத்து சொல்கிறது..... *ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாயெனெபடுவாள் செவிலியாகும்* நல்ல பெரிய சிறப்புடைய அறிதற்குரிய மறைபொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாயெனப்படுவாள் செவிலியாகும்..... *கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள நல்லவை உரைத்தலும் அல்லவை கட...
*உலக செவிலியர் நாள்* ~~~~~~~~~~~~~~~~~ (*International Nurses Day*) *உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது*. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும்...
Comments
Post a Comment