Part 1...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

நான் ... அருள்நீதிதேவன். ஆண் செவிலியர். இங்கிலாந்து. ஒரு நர்ஸா... இங்க எப்புடி வாழ்க்கை போகுதுன்னு பகிர்த்துகிறதுக்கு ஆசை படுறேன். என்ன ., என்ன.. இழப்புகள், என்ன சாதிச்சோம்னு வெளியில சொன்னா.. மனசுக்கு ஒரு இதம்.
டிபிக்கல் நர்சிங் குடும்பம். என்னவெல்லாமோ ஆகணும்னு கனவுகண்டாங்க பெத்தவுங்க. எனக்குன்னு எந்த கனவும் இருந்தது இல்ல. ஆனா நர்சா மட்டும் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். கம்ப்யூட்டர்ல எம்பில் வர பண்ணினாலும் ., கடைசியில வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது “செவிலியம்” தான்.
நர்சிங்சேருர வரைக்கும் நான் வாழ்க்கைல கஷ்டம்னு ஒரு பகுதியை பார்த்தது இல்ல...
அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் தினமும் ஒரு
படிப்பினை.

நான் .... எனக்குன்னு பல அவதாரம் இருக்கோ இல்லையோ.... அத சொல்லி பீத்திக்க விரும்பல.
ஆனா “ நான் செவிலியன்” னு சொல்லிக்கிறதுல .., ஏகமனதாக கர்வப்படுகிறேன்...

இங்கிலாந்துல வேல பார்குறதுனால .., இவன் புத்திசாலையோ.., படிப்பாளியோ ன்னு நினைக்காதீங்க. நான் ஆவரேஜ் மாணவன் தான். அதுக்காக திறமை இல்லைன்னு இல்ல.. அத உபயோகிக்கத் தெரியாத சோம்பேறி.
அப்புறம் எப்புடின்னு கேக்குறீங்களா?..

அஜித் வசனத்துக்கு ஆப்போசிட்டுங்க நான்.

“ என்னோட வாழ்க்கைல.. ஒவ்வொரு நாளும் , ஏன் ஒவ்வொரு செகண்டும் யாராவது ஒருத்தர் என் கூட இருந்து செதுக்கிக்கிட்டே இருந்தாங்க. , இருக்காங்க. “

இதுல மத்த பகுதிக்கு போகாம நர்சிங்ல .., என்னை செதுக்குன என் நர்சிங் நண்பர்களுக்கு நன்றி சொல்லிட்டு துவங்கலாம் னு நினைக்கிறேன்.

இத நான் அட்டன்ட் பண்ணுன இன்டர்வியூ ல இருந்து ஆரம்பிச்சா தான் நல்லா இருக்கும். கொஞ்சம் அறுவையா கூட இருக்கும்.  பார்த்துக்குங்க. இத படிச்சுட்டு என்னை கலாய்க்கலாம் ., திட்டலாம். பீல் பிரீ...


NMC இது நம்ம ஊர் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மாதிரி. ஓவர்சீஸ் நர்சஸ்க்கு வாசப்படி மாதிரி.
அதுல ரெஜிஸ்டெர் பண்ணினா தான் நம்ம ஊர்ல இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணுனா முன்னுரிமை தருவாங்க.
பலபேரு இண்டெர்வியூ அட்டென்ட் பண்ணினாலும்., அந்த ரெஜிஸ்டரேஷன் வச்சு தான் எனக்கு முன்னுரிமை கிடைச்சுச்சு.
அதோட ... எந்த இண்டெர்வியூ வுக்கும் முன்னால நம்மள நாம தயார் பண்ணிக்கிறதுக்கு முன்னால., நம்மள இண்டெர்வியூ பண்ணுறவங்கள பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அப்போ தான், நாம .. அவங்க என்ன கேட்பாங்க .., நம்ம கிட்ட,  என்ன எதிர்பார்ப்பாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.
அப்புடி ஒரு ஐடியாவுல தான் என்னால இண்டெர்வியூ ல ஜெயிக்க முடிஞ்சது.
அதுக்கப்புறம் ... என் நண்பர்கள் தயவால் ஒருவழியா இங்கிலாந்து வந்து சேர்த்தேன். (நண்பர்கள் உதவி பற்றி இன்னொரு பாரால சொல்லுறேன்.)
எங்கஊருல கருவைமரம் தான் பசுமையா இருக்கும். தண்ணி இல்லா காடு.
அப்புடி இருக்குற ஊருல இருந்து ., பழுப்பு மரங்களின் இலையுதிர் காலத்துல பர்மிங்ஹாம் வந்து சேர்த்தேன். எல்லாமே புதுசு. எதோ வேற்று கிரகத்துல இறங்குன மாதிரி இருந்துச்சு.

NMC பத்தி சொல்லியே ஆகணும். நம்ம ஊரு கவுன்சிலுக்கும் இதுக்கும் நிறைய வேறுபாடு.
இங்க அவங்கள தொலைபேசி மூலமாவோ , ஈமெயில் மூலமாவோ துரிதமா தொடர்புகொள்ளலாம்.
நான் RN3 - ரெஜிஸ்டெரெட் மெண்டல் ஹெல்த் நர்ஸ் அஹ ரெஜிஸ்டெர் பண்ணுனேன்.
6 மாதம் ப்ரொபெஷனல் ட்ரைனிங். அப்புறம் தான் முழு நர்ஸ்.
அந்த 6 மாசத்துல பண்டமென்டல் ட்ரைனிங்... குறிப்பா, பயர் சேஃப்ட்டி, மூவிங் ஹண்ட்லிங், புட் ஹ்யஜின், இன்பெக்ஷ்ன கண்ட்ரோல்... இதெல்லாம் படிக்கணும்.
அதோட பெர்சோனாலிட்டி டெவெலப்மென்ட் சொல்லிகுடுப்பாங்க. போன் ல எப்புடி பேசுறது. தெரியாதுங்குற விசயத்த எப்புடி பக்குவமா சொல்லுறது. இப்புடி நிறைய.


வேலைன்னு வந்துட்டா, வெள்ளைக்காரன்.
இதுக்கு அர்த்தம் என்னன்னா....
டூட்டிக்கு பங்க்சுவல் ரொம்ப முக்கியம். ஒரு நிமிஷம் லேட்டு ஆனாலும் கொலைபண்ணுனவன் மாதிரி பார்ப்பாங்க.
தெரியாத விசயத்த., தெரியாது ன்னு சொல்ல வெட்கப்படமாட்டாங்க. அதே நேரம் தெரிஞ்சுட்டு சொல்ல்லுறேன் னு எஸ்க்கியுஸ் கேட்பாங்க.
matron வந்து ஸ்வீப்பர் ட ஒரு வேலைய செய்ய சொன்னாக்கூட ... ப்ளீஸ் இத உங்களால செய்யமுடியுமா ?ன்னு முதல்ல கேட்பாங்க. அப்புடி கேட்டும் பண்ணலேன்னா , இதுனால பண்ணல .., எதுவும் சிரமமா ? ன்னு கேட்பாங்க.. அப்புடியும் பண்ணல ன்னா “supervision sesson “னு மாசம் ஒன்னு வைப்பாங்க. அதுல கண்டிப்பாங்க. இல்லாட்டி வேற வேலை பாருங்கன்னு சொல்லி வீட்டுக்கு அனுப்பீடுவாங்க. அப்புடி அனுப்புவது DBS  ஒரு காண்டாக்ட் செர்டிபிகேட் மாதிரி இங்க இருக்கு. அதுல ரெகார்ட் பண்ணிடுவாங்க. வேற வேலைக்கு போகும்போது அங்க அந்த சர்டிபிகேட் ட ஆன்லைன் ல செக் பண்ணி வேல குடுக்க மாட்டாங்க. அதனால இங்க வேலை பாக்குறதுல எல்லோருக்கும் ஒரு அக்கறை.
அதோட எந்த வேலையவும் விரும்பி , பெருமையா தான் பார்ப்பாங்க.

அடுத்த வெள்ளைக்காரன் கேரக்டர் என்னன்னா
கம்யூனிகேஷன்.

கம்யூனிகேஷன்.

நாம , நமக்கு வந்த ஒரு தகவலை முடிந்தவரை 100% அப்படியே பரிமாற்றம் செய்ய முயற்சி பண்ணனும்.
நாம் பேசும் வார்த்தைகளின் மூலம் 7% தகவலை தான் பரிமாற்றம் செய்ய முடியும். 43% உடற்கூறு மொழி தான்., நாம என்ன சொல்ல முயற்சிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும்.
அதுக்கும் மேல ... எவ்வளவு தெளிவாக, சுலபமாக அடுத்தவங்க புரிஞ்சிக்கிற மாதிரி சொல்வது ரொம்ப முக்கியம்.
(நர்ஸஸ்க்கு ரொம்ப ரொம்ப முக்கியம் ).

நேத்து கூட லதாக்கா ஒரு குறுந்தகவல் அனுப்பினார்கள். சாகும் வரை சாப்பிடனுமா? ... அப்படின்னு நினைக்காம... வாழும்வரை சாப்பிடனும்னு பாசிட்டிவ் வா பேச பழகனும்.

வேலை பார்க்கும் இடத்தில குறிப்பாக ., நாம .., நர்ஸ் ங்க இதுல ரொம்ப கவனமாக இருக்கனும். “பாசிட்டிவ் “ வேவ் நம்மகிட்ட இருந்து தான் வந்திருக்கும் நோயாளிகளிடம் பரவும். அவங்க ஏற்கனவே தன்னம்பிக்கையை இழந்து வந்திருப்பாங்க. மருந்தை விட மாமருந்து... நாம சொல்லுற நம்பிக்கையான வார்த்தைகள் தான். அதில் பொய்யான வாய்மை இருக்கக்கூடாது. எது உண்மையோ அதை பக்குவமாக ... அவங்க மனம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு , தைரியம் கிடைக்குமாறு இருக்க வேண்டும். ஒவரான நம்பிக்கை கூட பல நேரம் ஏமாற்றங்களை தூவி எதிர்வினை ஆக்கிவிடும்.

நம்ம தொழிலில் கம்யூனிகேசன் எது ன்னா குறிப்பாக டூட்டி ஹேண்டோவர்  ல இருந்து ஆரம்பிக்கும்.

ஹேண்டோவர் குடுக்குறப்ப அந்த ஷிப்ட் ல இருக்குற எல்லோரும் இருப்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் அவங்க வேலைக்கான டைரி இருக்கும். எந்த தகவலும் மிஸ் ஆயிடக்கூடாதுங்குற அக்கறை , கவனம் இருக்கும். இந்த தகவல் பரிமாற்றம் சரியா பரிமாற வேண்டியது நர்ஸோட முதல் டூட்டி.

டூட்டீஸ் அண்ட் ரெஸ்பாண்ஸிபிலிட்டீஸ்


வேலைக்கு சேரும்போதே நமக்கு டேர்ம்ஸ் அண்ட் கன்டிஷன் னு நம்ம வேலையோட ஜாதகத்தையே தருவாங்க. எந்த வேலை பாரக்கனும். எந்த வேலையை பார்க்கக்கூடாது ன்னு தெளிவா இருக்கும்.
அதோட நம்ம வேலைக்கு கான்ட்ராக்ட் வேற சைன் பண்ணனும்.
- வாரத்துக்கு 48 மணி நேரம் வரை பார்க்கலாம். இது அரசு விதி. அதுக்கு மேல நம்ம விருப்பப்பட்டால் பார்க்கலாம். அதுக்கு வில்லிங் பாரம் சைன் பண்ணனும். இது நம்மள வேலைக்கு சேர்த்த எம்ளாயரை பாதுகாக்கும். (வேலை பளு அதிகம் தரப்படவில்லை என்பதை காமிக்க)

நம்ம ஊருல டோட்டல் தமிழ்நாடு நர்ஸஸ் எல்லோரும் ஒரு ஆளுமைக்கு கீழ்வருவோம். ஆனா இங்க அப்படி இல்ல. ஒவ்வொரு மருத்துவமனையும் தனி ஆளுமை. தனி பட்ஜெட்.
டூட்டிக்கு இத்தனை நர்ஸஸ் இருக்கனும்னு வரைமுறை இருக்கும். நம்மூருள ஒரு நர்ஸ் சூழ்நிலை காரணமாக டூட்டிக்கு வரமுடியவில்லைன்னா இன்னொரு நர்ஸ் அவங்க வார்டையும் சேர்ந்து பார்க்கனும். இல்ல டெப்டேஷன்ல சில பேரை வைத்து இருப்பாங்க.
இங்க அப்புடி வேலை பார்க்க ... அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் இருக்கும் அவங்கள நாடி டூட்டிய கவர் பண்ணுவாங்க. அவங்கள ஏஜென்சி நர்ஸஸ்னு சொல்லுவோம்.
இதுல NMCயோட பங்கு முக்கியம். ரெஜிஸ்டர் பண்ணின நர்ஸஸ் எல்லோருக்கும் வருட தகுதி மதிப்பீடு ., 3 வருட ரீவேலிடேஷன் (ட்ரைனிங், வேலை பார்த்த குறிப்பிட்ட மினிமம் அளவு மணி அளவு இருக்கனும். இல்லாட்டி ரெஜிஸ்ட்ரேஷன் திவாலாகிவிடும். அதனால் எல்லா நர்ஸஸ் சும் அப்டுடேட்ல இருக்கனும்.
எந்த சூழ்நிலையிலும் நர்ஸஸ் மன அழுத்தம் இல்லாம இருக்காங்களான்னு அப்சரவ் பண்ணுற
கிட்டே இருப்பாங்க.

டாக்டர்ஸ் அண்ட் நர்ஸஸ்.

நம்ம ஊருல டாக்டர்ஸ் னா நம்மள காட்டிலும் சுப்பீரியர் ...அப்படிங்கிற எண்ணம் இருக்கும். இங்க அப்படி பாகுபாடு அப்பீஸியலா இல்லை. அவர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு - நோயாளியின் சிகிச்சையை அடிப்படையாக மட்டுமே இருக்கும்.
அதையும் இரண்டாக பிரிக்கலாம். மெடிக்கல் மேனேஜ்மென்ட் ., நர்ஸிங் மேனேஜ்மென்ட்.

ட்ரீட்மென்ட் க்கு டாக்டர்ஸ் ரெஸ்பான்ஸிபில்.
கேர் க்கு நர்ஸஸ் ரெஸ்பான்ஸிபில்.
நர்ஸஸ் அப்பீஸியல் மேனேஜ்மென்ட்குள்ள டாக்டர் க்கு வேலை இல்லை.
தவிர நம்மூருல மாதிரி .. இங்க., டாக்டர்ஸ் , தனியா சுயமாக க்ளினிக் வச்சுக்கிற முடியாது.
அவங்கள பொதுவா General Practitioner னு சொல்லுவோம்.
மருத்துவம் இங்க பல நிலைகளில் இருக்கு.
ப்ரைவேட் மேனேஜ்மென்ட் கீழ குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மருத்துவமனைகள் இருந்தாலும் அரசின் மூலாதார ஆளுமையின் கீழ் தான் இருப்பாங்க.
இங்க ஒவ்வொரு குடிமகனும் (ளும்) அவங்க தெருவில் இல்லாட்டி அவங்க ஏரியாவில் இருக்கும் அரசு க்ளினிக் கில் தங்கள் பெயர் , மருத்துவ குறிப்புகள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். இல்லாட்டி ட்ரீட்மென்ட் இல்லை (அல்லது பணம் செலவழித்து சிகிச்சை பெற வேண்டும். அது ரொம்ப ஜாஸ்தி)
ஆம் இங்க குடிமக்களுக்கு மருத்துவம் இலவசம்.
பதிவு செய்யப்பட்ட க்ளினிக்கில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு டாக்டர் ஒதுக்கப்படுவார். அந்த டாக்டருக்கு இத்தனை பேஷன்ட் என்று வரையரை இருக்கும்.

சிகிச்சை முறை.

மூன்று நிலைகள் உள்ளன.
சாதாரணம், துரிதம். எமர்ஜன்சி.

சாதாரணம் -
 111 என்ற நம்பருக்கு டயல் பண்ணி அட்வைஸ் கேட்கலாம். (காய்ச்சல் , தலைவலி) அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிகிச்சை முறையையோ..., இல்லை எங்கு செல்ல வேண்டுமோ ... அறிவுரை வழங்குவார்கள்.
துரிதம்-
இதை பதிவு செய்த க்ளினிக்கில் சென்று பார்ப்பது. இதற்கு அப்பாயிண்மென்ட் வாங்க வேண்டும். அங்கு நாம் சென்று டாக்டரையோ அல்லது நர்ஸையோ (ஆம் நாம தான்) பார்த்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். எதுவும் x Ray ., scan., blood check form இங்கு அரேன்ஜ் பண்ணப்படும்.
இன்னும் துரிதம் என்றால் .... மருத்துவமனையில் இருக்கும் OPக்கு சென்று டாக்டரையோ, நரஸ்ஸையோ பார்க்கலாம்.

Emergency

உயிருக்கு ஆபத்தான நிலையில் 999 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டால் ..., அடுத்த 5-8 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடும். (வரணும் என்பது law). உடனடியாக முதலுதவியும் ., மருத்துவமனை அட்மிஷனும் கிடைக்கும்.


மொழி பிரச்சனை.

இங்க வர்ர எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை இது. நம்ம ஊருல என்னதான் இங்கிலீஷ் ல டாக்டரேட் வாங்குனாலும் கொஞ்சம் confident டா இங்க வந்து பேச பயம் இருக்கும். அதுலயும் நான் இருக்குற ஊருல இங்கிலீஷ் ஷ நம்ம ஊரு சென்னை பாஷை மாதிரித் தான் பேசுவாங்க. புரிந்துகொள்வது ரொம்ப கஷ்டம். இங்க is,are எல்லாம் ஒன்னு தான். Huw beeen iyaw ? அப்புடின்னா “how are u being அதாவது “எப்படி இருக்கீங்க” ன்னு அர்த்தம். Yes you are அப்படிங்கிறத yep iyaw vaam - yes you am அப்புடின்னு சொல்லுவாங்க. பேஷன்ட் ட நாம சரியா புரிஞ்சுக்கிட்டு பேசனும். இப்புடிலாம் அவங்க பேசுறத மனசுல வாங்கி ., நொடி நேரத்துல மனசுக்குள்ள translate பண்ணி திரும்ப நாம அவங்க கிட்ட பேசனும். நான் எல்லாம் இங்க்லீஷ் க்கு பயந்துதான் காலேஜ்ல எக்ஸாம் எழுதாம 30 அரியர் வாங்கினேன். 27 வயசு வர இங்கிலீஷ் ல எழுத தெரிஞ்ச எனக்கு ... பேசுறதுக்கு , நாக்கு வளையாது.
இப்ப என்னால தமிழ்ல இருந்து இங்க்லீஷ் ல translate பண்ணாம , நேரடி இங்கிலீஷ் லேயே யோசிச்சு இங்க்லீஷ் ல பேச என் இங்கிலீஷ் வாத்தியார் தான் காரணம். அந்த வாத்தியார் என் மூத்த பொண்ணு.

இப்ப எனக்கு தமிழ் ஆளுங்க கிட்ட இங்க்லீஷ்ல பேச த்தான் பயம். ஏன்னா... அவங்க தான் க்ராமர் ல தப்பு கண்டுபிடிப்பாங்க. இங்க்லீஷ்காரங்க நாம தப்பா பேசினாலும் என்கரேஜ் பண்ணுவாங்க. ஏன்னா ... ஒரு வேத்துநாட்டுக்காரன் அவங்க மொழிய பேசுறது அவங்களுக்கு பெருமையான விசயம். (ஒருவேளை இது தான் இங்க்லீஷ் எல்லா மக்கள் கிட்டயும் எளிதாக பரவுனதுக்கு காரணமாக கூட இருக்கும் போல).
நம்ம ஊருல இங்க்லீஷ்ல டாக்டரேட் பண்ணவங்க கூட expression ல கோட்டை விட்டுருவாங்க. எந்த மொழிய பேசினாலும் expression ரொம்ப முக்கியம்.
நர்ஸிங் ல நமக்கு தேவையான முதல் பண்பு என்னன்னா..... பேஷன்ட்ங்க , அவங்க கூட இருக்குறவங்க சில நேரம் கடுமையா பேசுவாங்க. அது அவங்களோட denial மனநிலை. அப்போ நாம தான் அத புரிஞ்சுக்கிட்டு பக்குவமாக , அதே நேரம் கான்பிடன்ட் டா பதில் சொல்லனும். அந்த பதில் ... அவங்கள கூல் பண்ணுறதோட மட்டும் இல்லாம , மேற்கொண்டு பேசவிடாம செய்யனும்.

இந்த “ட்ரிக்கை” நான் என் சித்தப்பு இளங்கோவன் ட தான் கத்துக்கிட்டேன். (இது அவருக்கு தெரியாது).
படிக்கிறப்ப ஒரு விசயத்துல நான் லெட்டர் மூலமா என் கோவத்தை காமிச்சேன். அதுக்கு பதிலா ... என் கிட்ட சித்தப்பு , சண்டை போடல. அதுக்கு பதிலா ...  அவரு மேல தப்பே இல்லாட்டியும் .., தான் அந்த தப்ப ஏற்றுக்கொண்டு “நீதி... நீ எழுதின லெட்டர் அருமை. அப்படின்னு நிறைய பாராட்டு வார்த்தைகளை எழுதி ... கடைசியாக ... உனக்கு உண்மை புரியும் போது வருத்தப்படுவியே ன்னு தான் வருத்தப்படுறேன் னு .., எழுதி இருந்தாப்ல.
சரியான வாழைப்பழத்தில் வலிக்காம ஊசி  சொருகுன மூவ்மெண்ட் அது.
அந்த ட்ரிக் .. ரொம்ப ஒர்க்அவுட் ஆகுது இங்க.
இது வரை நான் யூனிஃபார்ம் போட்டபிறகு கோவப்பட்டதே இல்லை.
இங்க எனக்கு அதுனால எதிராளிங்க கூட இல்லை.
இப்ப எல்லோர் முன்னிலையிலும் நான் சித்தப்பு மேல அப்போ கோவப்பட்டதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன். “Sorry Sithappu “.
பாத்திமா க்கா. முன்னாடி ஒரு தடவ சொல்லி இருக்கேன்ல .... சித்தப்புவ நான் எவ்ளோ டீஸ் பண்ணினாலும் கோவப்பட்ட மாட்டாப்ல ன்னு. இந்த ட்ரிக் க வச்சு என்ன ஆப் பண்ணிடுவாப்ல. 😬😬😬😁😁

சகிப்புத்தன்மை ... உடல் பலத்தை விட பல மடங்கு பலம் வாய்ந்தது. நர்ஸஸ்க்கு ரொம்ப முக்கியம்.

தமிழநாட்டுல கவர்ண்மெண்ட் “school of nursing” ல படிச்சவங்க காலரை தூக்கி விட்டுக்குங்க. (தனியார் ல படிச்சவங்க மன்னிச்சுக்குங்க. உங்கள discrimination பண்ணல. இந்த இடத்துல இவங்கள ஒரு அதிர்ஷ்டமான விசயத்துல பாராட்டித்தான் ஆகனும்).

உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் நம்மூரு கவர்ண்மெண்ட் ஆசுபத்திரியில ட்ரெயினிங் எடுத்திருக்குறவங்க கான்பிடண்ட் டா வேலை பார்க்கலாம். ஏன்னா ..., நமக்கு ப்ராட்டிகலா நிறைய கத்துக்க சான்ஸ் கிடைக்கும்.
இங்கிலாந்து ல நர்ஸிங் ஸ்டூடெண்ட்ஸ் ஸோட ப்ராட்டிகல் அனுபவம் ரொம்ப கம்மி.
நான் நர்ஸிங் படிக்கிறப்ப ... ஒழுங்கா கத்துக்கிட்டது catheterisation தான். ஆயிரம் ஆயிரம் தடவை அத நான் செஞ்சாலும் இதுவரை யாருக்கும் bleeding ஆனது இல்ல.
இங்க வெள்ளக்கார டாக்டர் க்கு கூட கான்பிடண்ட்  இருக்காது. ஏன்னா ப்ராக்டகலா அவங்க வீக் தான்.
நான் கத்துக்கிட்டது  ஒரு சுவாரசியமான கதை. தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல யூராலஜில அப்போ டாக்டர். தர்மராஜ் தான் chief.
Break time ல அவர் என்ன கேண்டீன்ல பாரத்துட்டு (அப்போ அவர் வார்டில் ட்ரெயினிங் )
பிரதர் நானும் நீங்க வார்டுக்கு வந்ததில் இருந்து பார்க்கிறேன்.... எதையும் உருப்படியா கத்துக்குற மாதிரி தெரியலையேன்னு.
அப்ப தான் சொன்னார் வாரம் வாரம் யூராலஜி கேம் மாதிரி வியாழக்கிழமை வெளிநோயாளிங்களுக்கு catheterisation பண்ணுவோம். நீ தான் டேபிள் போடுற.. ஓகே யா ன்னு சொன்னார். அப்புடி போன போது தான் “பால்ராஜ்” MNA வ சந்தித்தேன். இவரு உனக்கு சொல்லித்தருவாரு ன்னு chief சொன்னாரு. எனக்கு ஈகோ. போயிம் போயும் MNA ட யா கத்துக்கனும்னு நெனச்சேன். Chief சொன்னாரு.. தம்பி. நான் house surgeon ஆ இருந்தப்ப இவரு தான் எனக்கு சொல்லிக்குடுத்தாரு ன்னு.
பாடம் - கத்துக்குற விசயம் ... யாரு சொல்லிக்குடுக்குறாங்கன்னு முக்கியம் இல்ல. வயசு , பதவி .. status எதுவும் பார்க்கக்கூடாது. அவங்க திறமைய மட்டும் தான் பார்க்கனும்.
இப்ப நான் இங்க catheterisation class லாம் students க்கு எடுக்குறேன். 🙂😊😊. நன்றி பால்ராஜ் அண்ணா.
(பின் குறிப்பு .. பால்ராஜ் அண்ணன் நாங்க முடிச்சுப்போன அடுத்த வருஷம் ரிட்டயர்ட் ஆயிட்டாரு. எங்க இருக்காருன்னு தெரியல. அவருலாம் படிக்கிற காலத்தில வசதி இருந்திருந்தா டாக்டராக கூட ஆயி இருந்திருப்பாரு. - இது chief வாயால சொன்னது ).

Health and safety.
வருமுன் காப்போம். இந்த மந்திரத்தை எப்பவும் கடைபுடிப்பாங்க இங்க. எல்லா விசயத்துலயும்.
குறிப்பாக fire awareness and safety.
நம்ம ஊருல பொதுவா எல்லாமே கான்கிரீட் கட்டடங்கள் தான். ஆனா இங்க மரம். அதுக்கு மேல plaster board. இதுல தான் உட்சுவர்கள் இருக்கும். எளிதாக தீப்பிடிக்கும் பொருட்கள். அதிகம். தீவிபத்து ஏற்பட்டா ... துரிதகதியில் பெருத்த சேதம் தான். அதனால் தீவிபத்து நடக்காமல் தடுத்தல்., நடந்தால் எப்படி துரிதமாக செயல்படுவது ... இதைத்தான் முதன்மை பாடமாக இங்க வச்சிருக்காங்க.
வேலைக்கு சேர்ந்ததும் முதலில் குசலம் விசாரிப்பு முடிந்ததும்... அடுத்த செயல்.., “emergency exit, fire extinguisher  and fire assembly point “ எங்க இருக்குங்குறது தான். இங்க LKG படிக்குற குழந்தைகளுக்கு கூட இது தான் முதல் பாடம்.
இந்த விசயத்துல முதல் நாள் நான் பண்ணுன கோமாளித்தனமும் இருக்கு.
வந்த முதல்நாள் எனக்குன்னு ஒதுக்கிய flat ல தங்கி இருந்தேன். இரவு சாப்பாடா sandwiches வச்சிருந்தாங்க fridge la. நான் வாழ்க்கைல முதன்முறையாக அப்போ தான் sandwiches யே பார்க்கிறேன். அதுவும் cold ஆ வேற இருக்கு. சரி தான் இத எப்படி சூடாக்குறதுன்னு நெனச்சேன். பக்கத்துல பிரட்டோஸ்டர் இருந்துச்சா.., அதுல warm பண்ணிடுவோம்னு ஒரு sandwich ச எடுத்து போட்டேனா..., என் நேரம் அதுல இருந்த cheese மெல்ட்ஆகி புகைய ஆரம்பிச்சுடுச்சு. Smoke detector மூலமா signal போயி fire alarm அடிக்க ஆரம்பிச்சுருச்சு. எல்லோரும் கூடிட்டாங்க. யாரும் திட்டல. ஆனா மனசுக்குள்ள திட்டி குமிச்சிருப்பாங்க. அப்புறம் அங்க இருந்த fire marshal என்ன பண்ணனும் னு சொல்லிக்குடுத்தாரு. என் reaction எப்புடி இருந்துருக்கும்னு சொல்லித் தான் தெரியனுமா?. 😬😬😬
(* இப்போ நானும் ஒரு fire marshal*)


இங்க ஒவ்வொரு குடிமகனும்(ளும்) medical card கண்டிப்பாக பதிய வேண்டியது.  அதன்பிறகு தான் மருத்துவம் பார்க்க முடியும். இல்லீகலா இருக்குறவங்க பாடு திண்டாட்டம் தான். பாராசீட்டமால், ஆன்டிஹிஸ்டமின் மாத்திரை தவிர prescription இல்லாம வாங்க முடியாது.

Once பதிஞ்சதும் நம்ம டாக்டர் பேரு போட்டு medical card கிடைக்கும். அதுல நம்ம unique number  இருக்கும். அதுக்கப்புறம் ... பதிஞ்ச நாளில் இருந்து நாம பார்த்த சிகிச்சை எல்லாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கப்படும். 20, 30  வருசம் கழித்தும் , நாம அன்னைக்கு என்ன சிகிச்சை எடுத்தோம்கிற விபரம் எல்லாம் பார்த்துக்கலாம். நமக்கு ட்டெம்பரேச்சர் பார்த்த டீடைல்கூட இருக்கும். எத்தனை டிகிரி இருந்துச்சுன்னும் தெரியும். 😁

(தொடரும்).....




Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......