part 1..சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..ச.பால்பாண்டியன்..

*செவிலிய மறுமலர்ச்சி தொடர்(30/04/17) :*

*சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..*

*அத்தியாயம் 2 :*

சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தோற்றம் குறித்தும், சங்க முன் வரைவுக் குழு பற்றியும், ஆரம்பகால உறுப்பினர்கள் பற்றியும் பார்த்தோம்..!!

இந்த அத்தியாயத்தில் நமது சங்கத்தின் தனிநிலை விதி(BYLAW) அமைப்பைப் பற்றி பார்க்கப் போகிறோம்..

*தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத் தனிநிலை விதி(BYLAW) அமைப்பு :*

*1. பெயர் :*

இச்சங்கத்தின் பெயர் *தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம்* என்று தமிழிலும்,

*TAMILNADU GOVT. NURSES ASSOCIATION* என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும்.

*2. இலச்சினை(Emblem) :*

இந்த சங்கத்திற்கு ஒரு வட்டத்தின் உள்ளாக ஒரு விளக்கிலிருந்து கதிர்கள் வெளிவருவது போன்று இலச்சினை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டத்தின் உள்ளாக *TGNA* என்றும், *பிணியாளர் சேவையே பிறப்பிலான் சேவை* என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

*3.வரையறுப்பு :*

*சங்கம்* என்றால் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் என்று பொருள்.

*உறுப்பினர்* என்றால் சங்கத்திற்கு சந்தா செலுத்தும் உறுப்பினர் என்று பொருள்.

*மாநில அலுவலகம்* என்றால் சங்கத்தின் தலைமை அலுவலகம்

*கிளை* என்றால் மாவட்ட கிளைச் சங்கங்கள்

*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம்:* இந்த இடத்தில் மாவட்ட கிளைச் சங்கங்கள் மட்டுமல்லாது நகரக் கிளைச் சங்கங்களையும் இணைக்க மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். நிர்வாக காரணங்களுக்காக நாம் இப்பொழுது ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் தனி கிளைச் சங்கமாக நிர்வகித்து வருகிறோம். ஆனால் அவ்வாறு செயல்படுவதற்கு விதிகள் மாற்றியமைக்கப்படவில்லை. எனவே சங்கத் தனிநிலை விதியில் அதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.)

*நகரம்* என்றால் சென்னை மாநகரம்

*நர்சுகள்* என்றால் பயிற்சி பெற்ற தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள நர்சுகள்(Both Gazetted & Non Gazetted)

*4. அமைவிடம் :*

சங்கத்தின் தலைமை அலுவலகம் *சென்னை* நகரில் இருக்கும். கிளைச் சங்க அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட *மாவட்ட தலைநகரங்களில்* இருக்கும்.

*(எனது கண்ணோட்டத்தில் மாற்றம்:* இந்த இடத்தில் மாவட்ட கிளைச் சங்கங்கள் மட்டுமல்லாது நகரக் கிளைச் சங்கங்களுக்கும் அந்தந்த கிளைகளிலேயே தலைமை அலுவலகங்கள் இருப்பதற்கு சங்கத் தனி நிலை விதியில் தகுந்த மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.)

*5. சங்கத்தின் நோக்கங்கள் :*

*அ)* இந்த நாட்டின் பகுதிகளுக்கு பொருந்துமாறு செவிலிய கலை மற்றும் அறிவியலை முன்னேற்றவும், மீள் உணர்வு பெறவும் செய்வதற்கு.,

*ஆ)* குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிவியல், தொழில் மற்றும் கலாச்சார கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்துவதற்கு.,

*இ)* அரசியல் கட்சிகளின் உள்ளீடு இன்றி, தமிழ்நாடு அரசு பணிகளில் உள்ள செவிலியர்களின் தரம் மற்றும் சேவை நிலையை மேம்படுத்தும் நோக்கில், செவிலியர்களின் குறைகளை அரசிற்கு தெரியப்படுத்துவதற்கு.,

*ஈ)*  *பிணியாளர் சேவையே பிறப்பிலான் சேவை* என்ற செய்தியை செவிலியர்களின் இல்லங்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கு.,

*எ)* வெற்றிக்கு துணை நிற்கிற, செவிலிய தொழிலின் இறையாண்மையை தூக்கி நிறுத்துவதற்கு தேவையான நோக்கங்களை அடைவதற்கு...

(தொடரும்....)

*மாநில அளவிலான நிர்வாகக் கட்டமைப்பு..*

அடுத்த பகுதியில்...

நன்றி..!!

ச.பால்பாண்டியன்.

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......