சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

*"செவிலியச் சிறகுகளின்*
*செவிலிய மறுமலர்ச்சி பாகம் -2"*  *(16/04/2018)*
~~~~~~~~~~~~~~~~~
✍✍✍✍✍✍✍✍
*படைப்பாளி*
 
*1.திரு.S.பால்பாண்டி*              
               *(செவிலியர்)*

     *(சங்கத் தனிநிலை விதியும்             (BYLAW), தனது  கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்...என்ற*செவிலிய மறுமலர்ச்சி கட்டுரை*


செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்.. 🙏🙏

*செவிலிய மறுமலர்ச்சி* 
*என்ற பெயரில் செவிலிய துறையின் முன்னேற்றத்திற்கு ஒரு அடி முன்னெடுத்து வைத்திருக்கும் ஆண் செவிலியர், எனது மூத்த சகோதரர் திரு.ராஜாராம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!*

ஒரு துறையில் மறுமலர்ச்சி என்பது அத்துறையைச் சேர்ந்தவர்கள், அவர்களின் துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும், அரசாணைகளையும், பணி நெறிமுறைகளையும் நீக்கமுற அறிந்து கொள்ளும் பொழுதுதான் ஏற்படும்.. அந்த வகையில் நம் செவிலியத்துறை சம்பந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு இம்முயற்சியானது வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்..!

செவிலிய மறுமலர்ச்சிக்கு வித்திட பல தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இதில் குறிப்பிடப்படாத தலைப்பின் கீழ் தகவல்கள் இருந்தாலும்  நம் செவிலியர்கள் பகிரலாம். அந்த வகையில் நான், *'சங்கத் தனிநிலை விதியும் (BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்'* என்ற தலைப்பின் கீழ் எனது தகவல்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..!

*தனிநிலை விதி(BYLAW)யைப் பற்றி ஒரு அறிமுகம் :*

முதலில் தனிநிலை விதி(BYLAW) என்றால் என்ன என்பது பற்றி நமது செவிலியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நமது சங்கத்திற்கு மட்டும்தான் தனிநிலை விதி(BYLAW) என்பது உள்ளதா..!? அப்படி கிடையாது. எந்தவொரு அமைப்பாக இருந்தாலும், சங்கமாக இருந்தாலும், தொண்டு நிறுவனமாக இருந்தாலும், கட்சியாக இருந்தாலும் தனிநிலை விதி(BYLAW) என்பது கட்டாயம்.. அந்த தனிநிலை விதி(BYLAW)யானது அந்தந்த அமைப்பின் செயல்பாட்டினைப் பொறுத்தும், கொள்கைகளைப் பொறுத்தும் அமைப்பிற்கு அமைப்பு மாறுபடும்..! எனவே நமது சங்கத்திற்கு மட்டும்தான் தனிநிலை விதி(BYLAW) இருக்கிறது என்று எண்ண வேண்டாம்..!

*தனிநிலை விதி(BYLAW)யின் முக்கியத்துவம் :*

ஒரு அமைப்பிற்கு தனிநிலை விதி(BYLAW) என்பது  நரம்பியல் மண்டலம்  போன்றதாகும்.. அந்த அமைப்பின் செயல்பாடுகள் அனைத்தும் தனிநிலை விதி(BYLAW)யின் மூலம் மட்டுமே நெறிபடுத்தப்பட்டிருக்கும்.. ஒரு அமைப்பானது அதன் தனிநிலை விதி(BYLAW)யை மீறி ஒருபோதும் நடக்கக் கூடாது.. எந்தவொரு அமைப்பின் தனிநிலை விதி(BYLAW)யானது உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளதோ, அந்த அமைப்பின் செயல்பாடுகள் மிகவும் உறுதியாகவே இருக்கும்.. 

அந்த வகையில் நமது சங்கத்தின் தனிநிலை விதி(BYLAW)யானது 1961ம் ஆண்டிலேயே மிகவும் வலிமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது சங்கத் தனிநிலை விதி(BYLAW)யானது உறுப்பினர் சேர்க்கையில் ஆரம்பித்து, கிளைச் சங்க, மாநில சங்க நிர்வாகிகள் தேர்வு, அவர்களின் செயல்பாடுகள், பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தும் நெறிமுறைகள் என அனைத்து சங்க செயல்பாடுகளும் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது..!

அதே சமயத்தில் நமது சங்கத் தனிநிலை விதி(BYLAW)யில் பல நிறைகள் இருந்தாலும், என்னுடைய கண்ணோட்டத்தில் காலத்திற்கேற்ற சில மாற்றங்களும் தேவைப்படுவதாகக் கருதுகிறேன்.. அடுத்தடுத்த பதிவுகளில் அதுகுறித்த தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்..

*இன்றைய பதிவில் தனிநிலை விதி என்றால் என்ன என்பது பற்றி பொதுவான தகவல்களை பகிர்ந்துள்ளேன்.. வரும் வாரங்களில் நமது சங்கத் தனிநிலை விதி(BYLAW)யைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள இருக்கிறோம்..*

*நமது சங்கத் தனிநிலை விதி(BYLAW) உருவாக்கம்........*

*அத்தியாயம் 1:*

*சங்கத் தனிநிலை விதி(BYLAW) உருவாக்கம் :*

செவிலிய சொந்தங்களுக்கு வணக்கம்..! சென்ற வாரத்தில்(16/04/18) தனிநிலை விதி (BYLAW) பற்றிய பொதுவான கருத்துகளை பதிவிட்டிருந்தேன்.. அது உங்களுக்கு எளிதில் புரியும்படியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்..! 

இந்த வாரம் முதல் நமது சங்கத்தின் தனிநிலை விதி(BYLAW) குறித்து விரிவாக எடுத்துரைக்க ஆவலாக உள்ளேன்..! இடையில் தங்களுக்கு குழப்பமோ, சந்தேகமோ ஏற்பட்டால் தாராளமாக என்னிடம் வினவலாம்..!

*THE MADRAS GOVT. NURSES ASSOCIATION*
*(Established In 1960)*

*விதிகள் அமைப்பு*

*முகப்புரை:*

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் பயிற்சி பெற்ற அரசு செவிலியர்களாகிய நாங்கள் இணைந்து, அரசின் விதிகளுக்கு உட்பட்டு, அரசாணை எண் *G.O MS 1160 (Public -General B) நாள் 11.05.1948* ன் படி எங்களுக்கென்று ஒரு சங்கம் அமைக்க ஒருமனதாக முடிவு செய்து, எங்களுக்கான சங்க சட்ட, திட்டங்களை நாங்களே அமைத்து ஏற்றுக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் அரசாணை எண் *G.O MS 1160 (Public -General B) நாள் 11.05.1948* ன் படி, தமிழக அரசால் பதிவு செய்யப்பட்ட சங்கமாகும். *இந்த சங்கத்தின் சட்ட, திட்டங்கள் சங்க முன் வரைவு குழுவால் 1960ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.* சங்க முன் வரைவுக் குழுவானது 06.03.1960 முதல் 25.06.1961 வரை செயல்பட்டது..

*சங்க முன் வரைவுக் குழு :*

*தலைவர்:*
 திருமதி.M.பாஸ்கரன்

*துணைத் தலைவர்கள்:*
1)செல்வி.J.H.D.ரொசாரியோ
2)செல்வி.L.கிரெஸ்டா

*செயலாளர் :*
திருமதி.A.ஆபிரஹாம்

*பொருளாளர் :*
1)திருமதி.I.மாணிக்கம்
2)திரு.A.காமாட்சிநாதன்

*துணை செயலாளர்கள் :*
1)திரு.P.சீனிவாசன்
2)திரு.D.K.எட்வர்டு

*குழு உறுப்பினர்கள்:*
1)செல்வி.J.ஆண்ட்ரே
2)செல்வி.B.ரோட்ரிக்ஸ்
3)திரு.R.பாலசுந்தரம்
4)செல்வி.L.சைமன்
5)திருமதி.K.சரோஜினி
6)திருமதி.I.N.ரச்சேல்
7)திரு.V.சீனிவாசன்
8)செல்வி.E.A.மாதுரி
9)திரு.N.R.கண்ணன்
10)செல்வி.டெய்சி ஜான்
11)திரு.D.மரியதாஸ்
12)செல்வி.எஸ்தர் ஷுடியல்
13)செல்வி.P.M.லூயிஸ்
14)செல்வி.T.C.ரோஸ்
15)திரு.O.K.அப்பு நாயர்
16)செல்வி.கமலா டேனியல்
17)செல்வி.சாந்தா விஸ்வநாதன்
18)திரு.J.D.துரைராஜ்
19)திருமதி.A.M.துபையேர்
20)திருமதி.M.I.F.மேத்யூஸ்
21)திரு.A.லசாரஸ்
22)திரு.H.S.நாகராஜ ராவ்
23)செல்வி.M.ஜானகி
24)செல்வி.M.பீட்டர்ஸ்
25)திரு.P.G.கிருஷ்ணன்
26)திரு.K.கிருஷ்ணன்
27)திரு.J.பால்மர்.

*1960ல் இச்சங்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள்,*

1. செவிலிய கண்காணிப்பாளர்கள்- 20
2. செவிலிய சிற்றாசிரியர்கள்- 19
3. தலைமை செவிலியர்கள் - 129
4. செவிலியர்கள் - 1364

ஆக மொத்தம்- 1532




(( *THE MADRAS GOVT. NURSES ASSOCIATION* என்ற பெயர் தற்பொழுது *TAMILNADU GOVT. NURSES ASSOCIATION* என்று  வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் நாம் இந்தப் பெயரையே பயன்படுத்துவோம்.

இரண்டாவதாக சங்க முன் வரைவுக் குழு மற்றும் குழு உறுப்பினர்களை எண்ணிக்கையில் கூட நான் குறிப்பிட்டிருக்கலாம், ஆனால் நம் சங்க முன்னோடிகளின் பெயர்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளேன்..

1960 ல் 1532 உறுப்பினர்களுடன் செயல்படத் துவங்கிய சங்கம் இன்று 15000 உறுப்பினர்களுக்கும் மேல் உள்ளடக்கி ஆலமரமாய் பரந்து விரிவடைந்துள்ளது. சங்கமானது பின்னாளில் இவ்வாறு விஸ்தரிக்கும் என்று அறிந்து அதற்கேற்றார் போலவே நமது சங்கத் தனிநிலை விதியை முன்னோர்கள் கட்டமைத்துள்ளனர்..))

*சங்கத் தனிநிலை விதி அமைப்பு....* அடுத்த பகுதியில்..!

நன்றி..!!

ச.பால்பாண்டியன்
அடுத்த பகுதியில் தொடரும்....

நன்றி..!!

இப்படிக்கு
உங்களில் ஒருவன்.,

*ச.பால்பாண்டியன்*
*செவிலியர்*
*அரசு மருத்துவமனை*
*குன்னூர்*
*நீலகிரி மாவட்டம்.

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......