part 2..சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி
*செவிலிய மறுமலர்ச்சி தொடர் :*
*சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..*
*அத்தியாயம் 3 :*
சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் *1) பெயர், 2) இலச்சினை, 3) வரையறுப்பு, 4) அமைவிடம், 5) சங்கத்தின் நோக்கங்கள்* ஆகியன குறித்து பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக சங்கத் தனிநிலை விதியில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாக கட்டமைப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.
*6) தனிநிலை விதி அமைப்பு:*
*மாநில அளவிலான நிர்வாகக் கட்டமைப்பு :*
மாநில செயற்குழுவானது கீழ்க்காணும் நபர்களை உள்ளடக்கியுள்ளது..
*அ) தலைவர்.*
*ஆ) துணைத் தலைவர்கள்- 13*
(ஒருவர் சென்னை நகருக்கும், ஏனைய 12 பேர் மற்ற மாவட்ட கிளைச் சங்கங்களுக்கும் பொறுப்பாளர்களாவர்)
*(1960 ல் நம் சங்கத் தனிநிலை விதி உருவாக்கப்பட்ட பொழுது, சென்னையுடன் சேர்த்து மொத்தமே 13 மாவட்டங்கள்தான். ஆனால் இன்று 32 மாவட்டங்கள். அதன்படி பார்த்தால் நமக்கு 32 மாநில துணைத் தலைவர்கள் தேவை. முன்னோர்கள் நம் சங்கத் தனிநிலை விதியிலும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கடந்த தேர்தலில் இதனை கொண்டு வரலாம் என்றால், காலதாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு 13 துணைத்தலைவர்களை மட்டுமே தேர்வு செய்தோம். அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மாநில துணைத் தலைவர் தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.)*
*இ) செயலாளர்*
*ஈ) துணைச் செயலாளர்கள்- 2*
(ஒருவர் சென்னை நகருக்கும், மற்றொருவர் புறநகர் மாவட்ட கிளைகளுக்கும் பொறுப்பேற்று, செயலாளருக்கு உதவியாக செயல்பட வேண்டும். செயலாளர் இல்லாத இடங்களில் அவருடைய பணியையும் சேர்த்து பார்க்க வேண்டும்).
*உ) பொருளாளர்கள்- 2*
(ஒருவர் சென்னை நகர வரவு செலவு கணக்குகளையும், மற்றொருவர் புறநகர் மாவட்ட கிளைச் சங்கங்களின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்க வேண்டும்).
மற்றும்
*செயற்குழு உறுப்பினர்கள் :* சங்கத்தின் ஒவ்வொரு 50 உறுப்பினர்களுக்கும் ஒரு செயற்குழு உறுப்பினர் வீதம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பதவியமர்த்த வேண்டும். இதன்மூலம் மாநில செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்தே மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது எளிமையாக இருக்கும்.
*மாவட்ட கிளைச் சங்க நிர்வாகக் கட்டமைப்பு :*
மாவட்ட கிளைச் சங்க செயற்குழுவானது கீழ்காணும் நபர்களை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
*அ) துணைத் தலைவர்* மாவட்ட கிளைச் சங்கம் இவரது தலைமையிலே செயல்படும்.
*எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* ( பெரும்பான கிளைச் சங்கங்களில் தலைவர் என்ற பதவியை வைத்து செயல்பட்டு வருகின்றனர். ஆனால் நம் சங்கத் தனிநிலை விதியில், கிளைச் சங்கங்களுக்கு துணைத் தலைவர் பதவியே தலைமைப் பதவியாக உள்ளது. தலைவர் என்ற பதவி மாநில தலைவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. கிளைச் சங்கங்களுக்கும் அதே முறையை பின்பற்ற வேண்டுமெனில் மாவட்ட துணைத் தலைவரை, தலைவர் என்ற பதவியாக மாற்றி, பின் அப்பெயரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.)
*ஆ) செயலாளர்.*
*இ) பொருளாளர்.*
மற்றும்
*மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் :* ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீதம் பதவியமர்த்தப்பட வேண்டும்.
*நகர கிளைச் சங்க நிர்வாகக் கட்டமைப்பு :*
நகருக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் துணைத்தலைவரின் உதவியுடன், மாநில நிர்வாகிகள் நகர கிளைச் சங்க பணிகளை நிர்வகிக்க வேண்டும்.
*எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* ( இங்கு நகரம் என்பது சென்னை மாநகரைக் குறிக்கிறது. சங்கத் தனிநிலை விதி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட இப்பொழுது சென்னை பல்மடங்கு பெருகிவிட்டது. இதில் மாநில நிர்வாகிகள் மாநில சங்கப் பணிகளையும் பார்த்துக் கொண்டு, நகர கிளைச் சங்கத்தின் பணிகளையும் சேர்த்துப் பார்ப்பதென்பது மிகவும் சிரமமானது.. எனவே பணிகளை பிரித்து வழங்குவதே நன்றாக இருக்கும். இப்பொழுது ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு கிளைச் சங்கம் செயல்பட்டு வருகிறது.. நான் முன்னர் குறிப்பிட்டது போல அதனை முறையாக சங்கத் தனிநிலை விதியில் மாற்றம் கொண்டு வந்து செயல்படுத்தும் பொழுது இன்னும் சிறப்பாக இருக்கும்).
தொடர்வோம்...!!
அடுத்த பகுதியில்...
நன்றி..!!
ச.பால்பாண்டியன்.

Comments
Post a Comment