Part 2...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

 எல்லோருக்கும் வணக்கம்.  


வாரகடைசில ரொம்ப பிசி. 
நாம பாக்குற வேலையவிட வீட்டுல பாக்குற வேலை ... இங்க அதிகம். எல்லாமே “நமக்கு நாமே “ தான். 
இங்க ., எங்களுக்கு வாட்ச்சும், மொபைல் போனும் இரு கண்கள். ஒவ்வொரு நாளும் நாங்க தூக்கத்துல இருந்து எந்திரிக்கும் பொழுது பார்க்க ஆரம்பிக்கிற வாட்ச்ஐ .., அன்னைக்கு எல்லாம் முடிச்சுட்டு , தூங்க போறப்போ ..  அடுத்த நாள் எப்ப எந்திரிக்கனும்னு அலாரம்  வைக்கிற வரை பார்த்துக்கிட்டே இருக்கனும்.  

இங்க மருத்துவத்துறையில் நர்ஸிங் ஹோம் பங்கு அதிகம். நம்ம ஊருல மாதிரி ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்ட படுக்கைகளுக்கு மேல் .., மூலையில் பாய் விரித்து அட்மிஷன் பண்ண முடியாது. 
அதே நேரம் ஹால்பிட்டல் ., சிகிச்சைக்கு மட்டும் தான்.
 பராமரிக்க .., 
1)ஒப்பந்தம் பண்ணப்பட்ட நர்ஸிங் ஹோம்க்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள். 
2) குழந்தைகள் என்றால் வீட்டுக்கு அனுப்பி பெற்றவர்கள் Care குடுக்கனும். 
ஆனா மருந்து ., மாத்திரைகள்.. தன்மைக்கு ஏற்ப ., அதாவது பாராசிட்டமால் , விட்டமின் , அலர்ஜி மாத்திரைகளை பெற்றவர்களே குடுக்கலாம். 
ஊசி, மற்றும் ஹார்மோன் இதரபடி பாதுகாப்பு இல்லாத , கண்டிப்பாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளை ஹாஸ்பிட்டலில் இருந்து நர்ஸஸ் வந்து பார்ப்பங்க. 
 
ரொட்டீன் செக்கப் இருந்தால் , குறிப்பிட்ட நேர ஸ்லாட்டில் அப்பாயின்மெண்ட் தரப்படும். அந்த நேரத்தில் சென்று பார்த்து வரலாம். 
இங்க OP 24 மணி நேரமும் இருக்கும். 

இப்ப நாம நர்ஸிங் ஹோம்குள்ள போவோம். 

இங்க முதுகெலும்பு யாருனா நர்ஸஸ் தான். யாரயும் அட்மிட் பண்ணுறதுக்கு முன்னாடி அசஸ்மெண்ட் பண்ணனும். பேஷன்ட் தன்மையை வைத்து எந்த நர்ஸிங் ஹோம்க்கு  அனுப்பனும்னு ஒரு டீம் இருக்கும். பெரும்பாலும் வீட்டில் வைத்து பராமரிக்க இயலாத நிலையில் உள்ளவர்களே நர்ஸிங் ஹோம்களுக்கு அனுப்பப்படுவார்கள். 
நர்ஸிங் ஹோம்ல அவங்க “பேஷன்ட்” இல்ல ... 
சில இடங்களில் “ரெஸிடண்ட்” .. ஆனா சரியான வார்த்தை “சர்வீஸ் யூசர்ஸ்”. 
ஏன்னா “dignity” ய ரொம்ப careful ஆ மெயின்டய்ன் பண்ணனும். 

ஒவ்வொரு சர்வீஸ் யூசருக்கும் கண்டிப்பாக ஒரு “next of kin” இருப்பாங்க. அதாவது அவங்கள Care of பண்ணுறவங்க. கணவருக்கு .. மனைவி, மனைவிக்கு .. கணவன் , parents க்கு புள்ளைங்கள்ல 1, 2 இப்படி இருப்பார்கள். 
யாரும் இல்லன்னா “power of attorney” யாக ஒருவர் நியமிக்கப்படுவார். அந்த வேலையை ஒரு வக்கீல் பார்ப்பார்.( சர்வீஸ் யூசர் பணக்காரரா இருந்தா). இல்லாட்டி அரசாங்கமே அரேன்ஜ் பண்ணும். அந்த வேலையை பார்க்க social worker னு இருப்பார்கள். அவங்க அதுக்குன்னு பட்டம் படிப்பாங்க. அது social services இல்ல. அதுவும் ஒரு சம்பளம் உள்ள வேலை தான். 

(நான் இருப்பது dementia care unit.  இது ஒரு தனி உலகம்).
____________________________________
 Personal centre care. 

நாம நர்ஸிங் கேர் ல comprehensive care மார்டனைஸ் பண்ணி கேள்வி பட்டு இருக்கோம். பாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம். 
இப்ப ட்ரெண்ட் என்னன்னா..... 
Personal centre care தான். 
சர்வீஸ் யூசர் ர மையப்படுத்தப்பட்ட பராமரிப்பு. 
அட்மிஷன் சம்பிரதாயம் முடிஞ்சதும் நர்ஸஸோட அடுத்த வேலை Care planning. 
இதுக்கே ஒரு முழு நாள் ட்ரெயினிங் குடுப்பாங்க. 
அந்த Care plan ல அத்யாவசியமான 10 plan இருக்கு. 
1) safe moving and candling 
2) safety environment
3) communication
4) nutrition - eating and drinking
5) personal cleansing and dressing
6) elimination
7) skin integrity
8) mental health and cognition 
9) sleeping - night Care 
10) medication 

அதுல பெரும்பாலும் எல்லா Care ரும் கவராயிடும். 

அத எழுத வேண்டியது நர்ஸஸோட வேலை. அப்புடி எழுதுனத carer ட்ட எடுத்துச் சொல்லி Care முழுமையா “சர்வீஸ் யூசர்” க்கு போய் சேருதான்னு பார்ப்பதும் நம்ம வேலை தான். 

Care plan எழுதுவது person centre ஆக இருக்கனும். ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும்.
அதுவும் “Mr.X க்கு நான் இந்த Care குடுத்தேன் என்று நம்மள முன்னிருத்தாம.... அவருக்கு தேவையான பராமரிப்பை என் மூலமாக பெற்றுக் கொண்டார்”  என்று அவங்க முன்னிலை படுத்தப்பட வேண்டும்....

(தொடரும்)........

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......