Part 3... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

From Interview to Birmingham


அப்போ நான் திருவான்மியூர் ல தங்கி IELTS தயாராகிக் கொண்டிருந்த நேரம்.
சக்திவேல் , பாண்டிச்சேரி ல வேலை பார்த்துக். கொண்டிருந்தான். அப்போ 2000 ல இருந்து எந்த posting ங்கும் போடல. எங்களுக்கு எங்கேயாவது போயி சம்பாரிக்கனும் னு வெறி. அரசாங்கத்துட்ட போராட்டம் பண்ணுறத விட, நம் முன்னாடி இருக்குற பாதைகளை ., களைந்து நமக்கான பாதையை பார்த்து போயின கிட்டே இருக்கனும். நம்ம பசங்க எல்லோரும் .., யாருக்காவது , எங்கயாவது பாரின் இன்டர்வியூ நடக்குறதா தெரிஞ்சா உடனே எல்லோரிடமும் சொல்லிடுவாங்க.
நான் பாரின் வர விதை போட்டது ராஜசேகர் அண்ணா, பார்த்திபன் அண்ணா. அப்புறம் செண்பகராமன் அண்ணா. (இவர் தம்பி இங்கிலாந்து ல இருந்தாரு).

அப்புறம் என் சகோதரன் ஜெபா., இங்க NMCல register பண்ணுறதுக்கு அவன் தான் காரணம். வேணாம்னு இருந்தவன வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போயி register பண்ண வச்சான். (என் மைண்ட் வாய்ஸ் .. அடப்பாவி என்னைய ஊறுகாய் ஆக்கிட்டானே ன்னு)

அப்புறம் நானும் நாகேந்திரன் அண்ணனும் டெல்லிக்கு போயி இன்டர்வியூ அட்டன்ட் பண்ணினோம். (ரெண்டுபேருக்கும் registration இல்ல அப்போ. பண்ணி இருந்தோம்னா கண்டிப்பாக கிடைத்திருக்கும்.).
கான்பிடண்ட் டா இருந்தோம்.
டெல்லி ல இருந்து திரும்ப ட்ரெயின் ல வரும் போது , “அண்ணே !! இந்த ட்ரெயின் என்னவிலைன்னு கேளுண்ணே... இங்கிலாந்தில சம்பாறிச்சு வாங்கிடுவோம்”னு நான் கேட்க....அதுக்கு அவரு .., இங்க எதுக்குடா .. இங்கிலாந்து ல யே வாங்குவோம்னு
சொன்னதெல்லாம் பெரிய காமெடி.

அப்புறம் சித்தப்பு இளங்கோவனும் நானும் TOFEL. ட்ரை பண்ணிணோம். சித்தப்புக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட். எனக்கு இந்த preparation மட்டும் தான் கமிட்மெண்ட். சித்தப்பு grammar ல , speaking ல கலக்குவாப்ல. எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கல. அவரு நம்ம ஊருலயே focus பண்ண ஆரம்பிச்சுட்டாரு.

இரண்டு பேரும் kev Nair இங்க்லீஷ் book ட்ரை பண்ணிணோம். நல்ல book அது. (நன்றி பால்ராஜ் நண்பா.. (இங்கிலீஷ் லெட்சரர்)

அப்புறம் ஜெபா , கோட்டயம் இழுத்துட்டு போனான். அங்க தான் NMC ல register பண்ணினோம்.
கேரளால ., சும்மா சொல்லக்கூடாது. எங்க, எதை , எப்போ பண்ணனும்னு சரியா ப்ளான் பண்ணி செயல்படுத்துவாங்க.
ஆனா அந்த இன்டரவியூ ல புட்டுக்கிச்சு. என் மூத்த பொண்ணு பிறந்து 2 நாள்ல இன்டர்வியூ. அதுக்கு முதல் மாதமே coaching வந்துட்டேன். குழந்தை பிறக்குற நாள் வந்துட்டு அடுத்த நாளே இன்டர்வியூக்கு கிளம்பி வந்துட்டேன். குழந்தை இங்குபேட்டர்ல. இன்டர்வியூல தோத்தது ரொம்ப உடஞ்சுட்டேன்.
அப்போ ஆறுதல் குடும்பமும் நண்பர்களும் தான்.
சரி IELTS  பண்ணிட்டு அப்புறம் எதுன்னாலும் யோசிக்கலாம்னு திருவான்மியூர் வந்து என் IT நண்பர்களோட தங்கி coaching போனேன்.
ஜெயகுமார் (ஜெபா அண்ணன்), பிரசாத் சென்னைல தான் இருந்தாங்க. ஜெபா, சக்தி, சதீஷ் பாண்டிச்சேரி ., நாகராஜ், சுந்தரம் அப்பல்லோ. இப்புடி இருந்தாங்க.

முதல்வரியை திரும்ப படிக்க.
சக்தி போன் பண்ணினான். “ அண்ணே !  பெங்களூர்ல இன்டர்வியூ வாம்ணே போகலாம் வா “ ன்னு. எனக்கு துளி கூட ஆர்வம் இல்ல. ஒப்புக்கு “சரி” ன்னு சொல்லிட்டு மறந்திட்டேன்.
சொன்ன மாதிரி வந்துட்டான். திருவான்மியூர் ல நாங்க இருந்த வீட்டுல ஜெயக்குமார் கூட வந்து எனக்காக காத்திருந்தனர். நான் எப்புடிடா தப்பிக்கறதுனு தெரியாம வீட்டுக்கு போனா , வீட்டுல நிக்குறாங்க. தப்பிக்க சான்ஸ் இல்ல.
சக்தி “அண்ணே ! உனக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. சும்மா துணைக்காக வாவது வாண்ணே...” ன்னு சொன்னான்.
ஜெயகுமார் , என் பாக்கெட்டில் 500 ரூபாய் வச்சு “கிளம்புமா” ன்னு சொன்னாப்ல.
கிளம்பி வெளியில் வரும்போது ஜெயகுமார் , “ நீதி, வீட்டுக்கு முன்னாடி பிள்ளையார் கோவில் இருக்கு பாரு.... வேண்டிட்டு போமா... “
(ஜெயகுமார், ஒரு கிருஸ்டியன்)

இன்டர்வியூக்கு போறப்போ பஸ்ல நடைபாதைல தான் படுத்து தூங்கினோம்.

இன்டரவியூ ஹால்ல சதீஷ் ஷ மீட் பண்ணிட்டோம். (சதீஷால சென்னை வரமுடியல).
என்கிட்ட biodata எதுவும் இல்ல. இருந்தா இன்டரவியூ அட்டன்ட் பண்ணலாம். அது ஸ்டார் ஹோட்டல்ல நடந்த இன்டர்வியூ. அங்க இன்டர்நெட் கபே இருந்தது. என் documents எல்லாம் என் ஈமெயில் அக்கவுன்ட் ல இருந்ததால் அங்கேயே டவுன்லோட் பண்ணி குடுத்துட்டேன். எனக்கு இன்டர்வியூ கடைசி. இடையில் சக்தியும், சதீஷும் அவங்களுக்கு கேட்ட கேள்விங்களை எனக்கு சொல்லி , என்ன பதில் சொல்லனும்னும் (!!) சொன்னார்கள்.
இடையில் , இன்டர்வியூ பண்ண கம்பெனி பத்தியும் ஆன்லைன் ல தெரிஞ்சிக்கிட்டேன்.
வேலை கிடைக்கும்னு நினைச்சு போகாததாலயோ என்னவோ.. எனக்கு டென்ஷன் இல்ல. எல்லாம் முடிச்சு அவங்க அவங்க ரொட்டீனுக்குதிரும்பினோம்.
ஆக 17. சதீஷ் ட இருந்து போன். “பைசன் (நாங்க ரெண்டுபேரும் மாத்தி ., மாத்தி இப்படி தான் கூப்புட்டுக்குவோம்.)  People tree (இன்டரவியூ அரேன்ஜ் பண்ணியவர்கள்) போன் பண்ணுனாங்க பைசன். ..உன் போன் நம்பர் இல்லையாம் அவங்க கிட்ட., உன்ன போன் பண்ண சொன்னாங்க. நீ செலக்ட் ஆயிட்டியாம்”... உன்னோட NMC ரெஜிஸ்ட்ரேஷன் சர்டடிபிகேட், IELTS லெட்டர் அனுப்புவியாம். “...
இதே வார்த்தை ய நான் அவன் இடத்தில இருந்து அவன் என் இடத்தில் இருந்திருந்தா... நான் சொல்லி இருப்பேனான்னு தெரியல.

அப்புறம் இரண்டு மாசம் சரி ஸ்பீட். விசாவுக்காக 2 வாரம் தினமும் அலைவேன்.
முதல் வீசா ரிஜக்டட். அப்புறம் சரியான லெட்டர் மூலம் இங்கிலாந்து கம்பெனி துரிதப்படுத்தி விசா ரெடி.
ஆன்லைனில் பார்த்துட்டு கால் தரையில் இல்லாத மாதிரி ஒரு பீலிங்.
என் தம்பி முத்துராமலிங்கம் பைக்ல என்ன embassy க்கு கூட்டிக்கொண்டு போனாப்ல. (எனக்கு பைக் ஓட்டம் தெரியாது ).
க்ரின்வேஸ் சாலைல முதல்நாள் பெய்த மழை சகதி ல வண்டி வழுக்கி இருவரும் நடு ரோட்டுல. எதுத்த மாதிரி அசுர வேகத்துல லாரி எங்கள நோக்கி....
இன்னும் 40 நிமிடத்தில் எனக்கு அப்பாயின்மெண்ட்.










நல்ல வேளையாக நாங்க விழுந்த இடத்துக்கு முன்னால சிக்னல் இருந்து கரைக்ட் டா ரெட் விழுந்து எங்க வாழ்க்கைல கிரீன் விழுந்துச்சு. முத்துவுக்கு செம அடி. நான் முத்து மேல விழுந்ததால் எனக்கு காலில் முட்டியில் அடி. மூன்றாம் பிறை ல கடைசி சீன் மாதிரி இழுத்து இழுத்து நடக்குறேன். ஆனா சுத்தி கூட்டம் கூடிருச்சு. எல்லாருமே ஹெல்ப் பண்ணுனாங்க. முத்து அவன பத்தி நினைக்கல. நீ போ ண்ணே ... எனக்கு ஒன்னும் இல்ல. நான் பார்த்துக்குறேன் னு ஆட்டோ புடிச்சு “பத்திரம்” னு அனுப்புனான். ஆட்டோ ல போனாலும், முத்து ரத்தமும் சதையுமா ரோட்டோரமா உர்காந்து இருந்தது அவன விட எனக்கு தான் வலி.

Embassy வந்தேன். எப்பயும் கராரா கத்துற செக்யூரிட்டி என்ன பார்த்து ,”என்னாச்சு பிரதர் ? “ னு கேட்டு , நிலமைய புரிஞ்சு எல்லோரையும் ஒதுக்கி விட்டு என்ன முதலா அனுப்புனாப்ல. யாரும் ஒன்னும் சொல்லல. அடுத்த 5 நிமிடத்துல என் பாஸ்போர்ட் ல UK வீசா. ஒரு வருஷம்.
முத்துவும் நானும் விழுந்தது தான் கடைசி தடை. அடுத்து எல்லாமே top gear la போச்சு.
செக்யூரிட்டி , “உங்க தம்பி ய போயி பாருங்க பிரதர்”... அவர நான் மனசால நிறைய தடவை திட்டி இருக்கேன். ஏன்னா ., கடந்த ஒரு மாசமா embassy படி ஏறி இறங்கி இருக்கேன். மனுசன் யாரயும் மதிக்க மாட்டாரு. விட மாட்டாரு.  ஆனா அன்னக்கி தான் உண்மை முகம் தெரிஞ்சுது. யாரோ எவரோ... தெரியாத நபருக்கு வருத்தப்படுறாரே. கையெடுத்து கும்பிடேன்.

முத்துக்கு அப்புறம் ஒரு வாரத்துல சரி ஆயிடுச்து.

என் பாஸ்போர்ட் ட வீட்டுல காமிச்சா .., அப்பா., அம்மாக்கு ரொம்ப சந்தோசம். பாஸ்போர்ட் மேல சந்தனம் , குங்குமம் லாம் வச்சாங்க. வருத்தப்பட்டது என் மனைவி தான். (தெரியாத ஊருல எப்புடி சமாளிக்கப்போறேன்னு).

எங்க ஊருல இங்கிலாந்துன்னு சொன்னா தெரியாது. “லண்டன்” னா தான் தெரியும்.
என் வீசா பக்கத்த கம்பெனிக்கு அனுப்புனா தான் flight டிக்கெட்.
இடையில் இங்கிலாந்து ல முன்னாடியே போயிருந்த திருநெல்வேலி செல்வராஜ் தான் NMC ல ஏதாவது கேட்கனும்னா கேட்டு சொல்லுவான். ஏன்னா நமக்கு இங்க்லீஷ்ல பேச பயம். இதுல வெள்ளக்காரங்க கிட்ட .., அதுவும் போன்ல ... ஒன்னும் புரியாது. செல்வா இந்த விசயத்துல எனக்கு மீடியேட்டர்.

டிக்கெட் வேணுமுன்னா நான் documents எல்லாம் ஈமெயில் பண்ணனும். அப்போ எங்க ஊருல அமீன் அண்ணா வோட “ரியாஸ் ஜெராக்ஸ் “ தான் இன்டர்நெட் இருந்த இடம். அன்னைக்கு வெள்ளிக்கிழமை. இங்கிலாந்து ல சனி ஞாயிறு லீவு. அடுத்த வாரம் தீபாவளி விசேஷம் இங்க. அன்னைக்கு கண்டிப்பாக அனுப்பி ஆகனும் 11:30க்குள்ள. ஏன்னா இங்கிலாந்தில் மாலை 5 மணியோட ஆபீஸ் க்லோஸ்.
மணி காலை 9. என் பங்காளி ரமேஷ் கூட வந்தாப்ல. 9 :10.  அமீன் அண்ணா கடை. (அமீன் அண்ணா என் தங்கை க்ளாஸ். என்ன விட இளையவர்.  அவர எப்பயும் கலாய்க ... அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு கடைசியில அண்ணாவாவே ஆயிட்டாரு. 😁)..

வழக்கம் போல பவர் கட்.

போச்சா. எல்லாம் போச்சா.
இல்ல. அமீன் அண்ணா வீட்டில ஜெனரேட்டர் இருந்துச்சு. இரண்டு மைல் போயி திரும்ப வந்து கம்ப்யூட்டர் ஆன் பண்ணி இன்டர்நெட் கணெக்ட் ஆக 10:30 ஆயிடுச்சு. ISD கால் பண்ணி கன்பரம் பண்ணினேன். “Yes Mr. Tamilkudimagan ., we received ur documents. Everything completed. U will receive email on Monday morning with ur flight details and ur job code of practice. Get it from Mumbai. “.

என்னவிட அமீன் அண்ணாவும் , பங்காளி ரமேஷ் வும்தான் குதிச்சாங்க.
அடுத்து என்ன... இங்கிலாந்துக்கு., சாரி சாரி ... லண்டனுக்கு “Tee  shirt போட்டு அதுக்குமேல கோட்சூட் போட்டு “ வந்த முதல் ஆளு நான் தான். (இது அடுத்த வருடம் ஊருக்கு வந்தப்ப கூட வேலை பார்த்த புரபஷர்கள் சொல்லித்தான் தெரியும் ... formal shirt போட்டு ., டை கட்டனும்னு. 😬😬😬😬😬😬).

(தொடரும்).....

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......