part 3....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி
*செவிலிய மறுமலர்ச்சி தொடர் :
*சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..*
*அத்தியாயம் 4 :*
சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தனிநிலை விதி அமைப்பில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளைப் பற்றி பார்த்தோம்.. இன்று சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், நிர்வாகம் குறித்தும் பார்க்கவிருக்கிறோம்..
*7)* *சங்கத்தின் ஆண்டு :* நாட்காட்டி ஆண்டுதான் (CALENDAR YEAR) நம் சங்கத்தின் ஆண்டுமாகும். சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு சங்க ஆண்டின் இறுதியிலும், சங்கத்தின் வரவு செலவை தணிக்கை செய்து, அதன் விவரத்தை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
*8)* *உறுப்பினர் சேர்க்கை :*
*>* தமிழக அரசின் கீழ் பணியாற்றும், முறையான பயிற்சி பெற்ற அரசு செவிலியர்கள் (BOTH GAZETTED & NON GAZETTED) அனைவரும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைய தகுதியுடையவர்களாவர். சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உறுப்பினர் படிவத்தை (இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது) பூர்த்தி செய்து, அதனுடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள உறுப்பினர் சந்தாவை செலுத்தி, சங்கத்தின் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.. இதற்கென தனியாக சேர்க்கைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது..
*>* அரசு பணியில் இல்லாதவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் எவரும் சங்கத்தில் உறுப்பினராகவோ, நிர்வாகியாகவோ தொடர முடியாது..
*>* சங்கத்தில் வாழ்நாள் சந்தா கட்டும் வசதி கிடையாது. ஒவ்வொரு வருடமும் சந்தா கட்டி , சங்கத்தின் உறுப்பினராக தொடர்ந்து கொள்ள வேண்டும்.
*>* ஒவ்வொரு உறுப்பினரும் வருட சந்தாவாக ரூ.6 ம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.1 ம் கட்டிக் கொள்ளலாம். எந்தவொரு உறுப்பினராவது வருட சந்தா கட்டத் தவறினால், சங்கத்தில் அவரின் உறுப்பினர்க்கான தகுதியை இழக்கிறார்கள்., மேலும் சங்கத்தின் மீது உரிமை கொண்டாடும் தகுதியை இழக்கிறார்கள்.. சங்கம் அந்த நபரின் எந்தப் பிரச்சனைக்கும் துணை நிற்காது..
*எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* ( நமது சங்கம் ஆரம்பித்த பொழுது வருட சந்தாக ரூ.6 என்பது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ரூ.6 க்கு ஒரு டீ கூட கிடைக்காது.. அதை மனதில் கொண்டுதான் சங்கத்தில் இப்பொழுது வருட சந்தாவாக ரூ.200. வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சங்கத் தனிநிலை விதியில் அதற்குரிய முறையான மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்).
*>* சந்தா செலுத்தத் தவறியவர்கள் மறுசேர்க்கைக் கட்டணம் ரூ.3 செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக தொடர்ந்து கொள்ளலாம்..
*எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* (மேலே குறிப்பிட்டது போல மறுசேர்க்கை கட்டணத்தையும் உயர்த்தி தனிநிலை விதியில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்).
*10)* *நிர்வாகம் :*
சங்கத்தின் நிர்வாக இயக்கம் மற்றும் கட்டுப்பாடு அனைத்தும் "மாநில செயற்குழுவின்" அதிகாரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவரின் பெயரால், சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெற வேண்டும். சங்கம் தொடர்பான கொள்கைகள் உருவாக்கும் அதிகாரம் அனைத்தும் "மாநில செயற்குழுவிற்கு" வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் கிளைச் சங்கத்தின் நிர்வாகம் "கிளைச் செயற்குழுவினால்" நிர்வகிக்கப்பட வேண்டும். மேலும் கிளைச் சங்கத்தின் துணைத் தலைவரின் பெயரால் கிளைச் சங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடைபெற வேண்டும்.
*சங்கத் தேர்தல் தொடர்பான பொது விதிகள், சிறப்பு விதிகள், மாநில மற்றும் கிளைச் செயற்குழுவின் பணிகள் மற்றும் அதிகாரங்கள்...*
தொடர்வோம்...!!
அடுத்த பகுதியில்...
நன்றி..!!

Comments
Post a Comment