Part 4... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....
முதல் விமான பயணம்
நவம்பர் 20, 2004.
நாளைக்கு 21 /11/ 2004 மதியம் மதுரையில் இருந்து மும்பை., அங்கு இரவு தங்கி, 22ம் தேதி people tree (interview agent) க்கு போயிட்டு.., எல்லா formalities முடிச்சுட்டு மதியம் அபுதாபி பயணம். நல்லிரவு அபுதாபியில் இருந்து பாரிஸ். பாரிஸ் ல 4 மணி நேரம் காத்திருப்பு. இறுதியாக பாரிஸ் - பர்மிங்ஹாம். 23/11/2004 மதியம் லேண்டிங்.
இது தான் பயணத்திட்டம்.
20/11/2004. மதியம். முதல்முறையாக ., 9 மாதம் ஆன என் மகள் எதையும் பிடிக்காமல் எழுந்து நின்றாள். மகிழ்ச்சி. ஆனால் இன்று மட்டும் தான் பார்ப்பேன். எப்பவும் கண்டிக்கிற அப்பா அன்னைக்கு ரொம்ப அமைதியா , அக்கரையா பேசினார்.
வாழ்க்கையின் அடுத்த கட்டம். வெளிநாடு .., எப்படி இருக்குமோ தெரியாது. எப்பயும் பணப்புழக்கம் இருந்தாலும் .., அந்த மாதம் சுனக்கம். கேட்ட இடங்களிலும் கிடைக்கல. கேட்ட இடங்களிலும் உண்மையிலேயே இல்ல. என் மாமனார் குடுத்த 20000 ரூபாய்., அம்மாவோட GPF ல 30,000. அப்புடி இப்புடின்னு ஒரு 70000 தேருச்சு. திட்டம் என்னன்னா.., ஒருவேளை .. போற இடம் சரியல்லன்னா..., அடுத்த flight ட புடிச்சு திரும்பி வர்றதுக்கு பணம் வேணும்ல.
எதுக்கும் கவலைப்படாதே.
எனக்கு தைரியம் சொல்லிட்டு அவரு பயந்தார்.
அம்மா .., தான் தைரியம். வீட்டுல அப்போ ஒரு மினி பறவை சரணாலயமே இருந்துச்சு. எல்லாம் விட்டுட்டு போகனும். எல்லா பறவைகளையும் வழக்கம் போல எண்ணிப்பார்த்துட்டு.., வீட்டுல இருந்த எல்லா ரூமுலயும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு ...
அதுவரை சாதிச்சதா .. துள்ளிக்குதிச்ச மனசுல வெற்றிடம்.
நண்பர்கள் , சொந்தங்கள் வந்து பேசுறாங்க., ஆனா அவங்க எல்லோரும் கிணற்றின் மேலிருந்தும்., நான் கிணற்றுக்குள் இருப்பது போலவும் கேட்டது. சில பல வார்த்தைகள் மனதில் பதியவேயில்லை.
டீவி ய போட்டா எங்கூரு லோக்கல் சேனல்ல .., “லண்டன்” செல்லும் நண்பனுக்கு வாழ்த்துச்சொல்லி scroll text ஓடிக் கிட்டு இருக்கு.
அடுத்த நாள். மதியம் வரை இப்புடியேபோச்சு. வேன் புடிச்சு மதுரை வந்தோம். வேன்ல ட்ரைவர் சீட் பின்னாடி “லண்டன் ப்ரிஜ்” படம். எல்லோரும் ., நீதி இங்க தான் போறாப்டின்னு பேசுனாங்க.
வண்டி முன்னாடி போனாலும்.., வைரமுத்து சொன்ன மாதிரி .., மனம் மட்டும் பின்னால் சென்றது.
விமான நிலையம்.
எங்க வீட்டு குட்டி பசங்க ., என் மகளோட விளையாட., நான் போயி தூக்கி வச்சுக்குட்டேன். இன்னும் எவ்வளவு நேரம் ....
ஆனா அப்ப தூக்கியது தான் ரொம்ப நேரம். அதுக்குப்பின் என்கிட்ட அவ்வளவாக என் மூத்த பொன்னு ஒட்டுனதே இல்ல. ஏன்னா., அடுத்த 5 வருசம் அப்பா என்ற உறவு வருடத்துல ஒரு மாசம் தான். ( இந்த மாதிரி வெளிநாடு, ஆர்மில வேலை பார்த்வங்களுக்கு நடந்து இருக்கும்).
வானத்தில விமானத்தை பார்த்த ஒரு வாண்டு , “டேய்... மாமா .., போற ப்ளைட் வந்துருச்சுடா...”,
அறிவு ஜீவியான இன்னொரு வாண்டு .., “டேய் ., அது இப்ப திருச்சி கிட்ட தான்டா வந்திருக்கும்.., ஆனா இங்க நம்ம கண்ணுக்கு தெரியும்டா..”.
என் நெற்றி பூரா.. விபூதி..
ஒரே ஒருத்தரு + போட்டாரு. ஜெபா, ஜெயகுமார் அப்பா.
(* ஜெபா எனக்கு முன்னாடி ஒரு இன்டர்வியூ அட்டன்ட் பண்ணி செலக்ட் ஆகி இருந்தான். Worcester NHS Trust க்கு. ஆனா அவனுக்கு முன்னாடி நான் கிளம்புற மாதிரி ... நேரம்.*)
ஜெபா அப்பா, “ யாருக்கு எப்ப என்ன நடக்குமோ, அப்ப நடக்கும். இதுல வருத்தப்பட ஒன்னும் இல்ல. அடுத்து ஊருக்கு நீ வர்றப்ப தம்பி அங்க இருப்பான்.. சேர்ந்தே வருவீங்க”..
சொன்னார்.. சொன்ன மாதிரி ஜெபா மே, 2005 ல இன்னும் நல்ல இடத்துல செலக்ட் ஆகி வந்தான். 2006 ல லீவுக்கு வந்து., ஒன்னா திரும்பி போனோம்.
மதியம் 1:50., எல்லாருக்கும் பிரியாவிடை சொல்லீட்டு விமானம் ஏறுனப்ப ., ஏதோ தூக்கு மேடை ஏறின மாதிரி இருந்துச்சு. நானும் எவ்வளவு நேரம் தான் அழுகை வராத மாதிரியே நடிக்கிறது. (வடிவேலு பாடிலாங்வேஜ்). தேமி தேமி அழுதேன். கூட வண்டில இருந்தவங்க ஒரு மாதிரியா பார்த்தாங்க. எனக்கு அதெல்லாம் தெரியல. என் வலி எனக்கு. வானத்தில இருந்து மதுரையின் அழகே அழகு. ஆனா ரசிக்க முடியல. போய்ட்டு வாறேன் என் மண்ணே.
பக்கத்துல இருந்த ஒரு சேட்., எனக்கு பெல்ட் போடுறத சொல்லிக்குடுத்தாரு.
மும்பை ல நைட் தங்கி அங்க நைட் பூரா தமிழ் சேனல் டிவி ல பார்த்தேன். லாட்ஜில் யாருக்கும் தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. இங்கிலீஷ் ல தான் பேசினேன். எனக்கே என் மேல நம்பிக்கை இல்ல. நானா பேசினேன்னு.
அடுத்த நாள் ., மணி எக்ஜேன்ஜ் பண்ணி அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ட்ராவலர் செக் எடுத்துக்கிட்டேன். 10 ஒரு பவுண்ட் காசுகள் வேற வாங்கிக்கொள்ள சொன்னார் ஏஜன்ட். ஏன்னா இறங்குனதும் போன் பேச public phone ல அது போட்டாத்தான் பேச முடியும்.
People Tree ல ஆபிஸ்பாய் அமோல் .. அன்னைக்கு பூரா கூட இருந்து ப்ளைட் ஏற்றிவிட்டான். நாங்க ரெண்டு பேரும் சைகைல தான் பெரும்பாலும் பேசிக்கிட்டோம்.
கையில ஒரு சோல்டர் பேக், ஒரு மீடியம் சூட்கேஸ் ... ரெண்டும் தான் என் சொத்து.
இடையில் விமானத்தில் கொடுத்த உணவை மட்டும் சாப்பிட்டேன்.
பாரிஸ் ல அந்த ஊரு நேரப்படி அதிகாலை 4:00.
இறங்கி வெயிட்டிங் ஹால் ல இருந்தேன். 9:00 மணிக்கு எனக்கு ப்ளைட் பர்மிங்காம் க்கு.
எனக்கு நல்லா சாய்ஞ்சுக்குற மாதிரி ஒரு சேர் கிடைத்தது. தூங்கவில்லை. 6:00 மணிக்கு எதிர்பக்கம் ஒரு தெரிந்த முகம். தரையில் குத்துக்கால் போட்டு உர்கார்ந்து ஒரு நபர். அவருக்கு உட்கார சேர் கிடைக்கவில்லை போல...
அவருக்கு அருகில் சில நபர்கள்... அசிஸ்டன்ட்ஸ் போல.
அவங்களும் அந்த நபரோட தரையில் உட்கார்ந்து இருந்தார்கள்.
அந்த நபர் .. “ டேவிட் பெக்காம்”.
மணிக்கு கோடிக்கணக்கில் சம்பாரிக்கிற ஆளு .. ரொம்ப சிம்பிளா....
யாருமே அங்க கண்டுக்கல.
எனக்கு உண்மையிலேயே சந்தேகம். டேவிட் தானா ன்னு. உண்மை தான். கடந்து போன ரெண்டு பெண்கள் கையெழுத்து வாங்கினாங்க.
நான் போயி பேசலாமா.. வேணாமா ன்னு நினைக்கிறதுக்குள்ள... அவங்க ப்ளைட் போர்டிங் அனோன்ஸ்மென்ட். போயிட்டாரு.
பர்மிங்காம் இறங்க இன்னும் 25 நிமிடம்
அப்போ இலையுதிர் காலம். வானத்தில இருந்து கீழ பார்த்தா ..
பழுப்பு நிறத்துல மரங்கள்... பச்சைபசேல்ன்னு புல்வெளி., வெள்ளைப்புள்ளியா செம்மறி ஆடுகள்...
மதியம் 23/11/2004 ... 12:40 லேண்டிங்.
சொன்ன மாதிரியே... அந்த ஒரு பவுண்ட் காசு தான் யூஸ் ஆச்சு.
ஒரு 45 நிமிடம் காத்து இருந்தேன். எப்ப நான் பர்மிங்காம் ஏர்போர்ட் போனாலும் .., முதல்முதலா நான் காத்திருந்து ., உட்கார்ந்து இருந்த இடத்தில் ஒரு நிமிடமாவது ... உட்கார்ந்து செல்வேன்.
எனக்கும் நவம்பர் 26க்கும் நிறைய தொடர்பு உண்டு.
1) என் தங்கை பிறந்த நாள்
2) என் அப்பத்தா இறந்த நாள்
3) நான் கமுதி காலேஜ்ல பார்ட்டைம் லெட்சர்ரா சேர்ந்த நாள்
4) இங்கிலாந்தில் நான் பார்த்த முதல்நாள் வேலை
5) என் மனைவி, மகள் இங்கிலாந்து வந்த நாள்
6) என் தந்தை இறந்த நாள்.
(தொடரும்).....

Comments
Post a Comment