Part 5... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

சம்பளம். வரி. நேஷனல் இன்ஸயூரன்ஸ்


இங்க, சம்பளம்... மணிக்கணக்கில் தான் அடிப்படை அளவு நிர்ணயிக்கப்படும்.
சராசரியாக.,வாரத்திற்கு 37.5 மணி நேரம் என்பது  முழுநேர வேலை நேரம்.
18 -24 மணி நேரம் -  பகுதி நேர வேலை.
அதற்கும் கீழ் என்றால் தற்காலிக பகுதி நேர வேலை. (Bank shift).

விடுப்புகள்.
 நமது நிர்ணயிக்கப்பட்ட வார வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு விடுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த வேலை என்றால்., 7 1/2 வாரங்கள் (அரசாங்க விடுமுறை உட்பட) .., தனியார் என்றால்., குறைந்தது 5.6 வாரங்கள். பெரும்பாலும் 4 வாரங்களுக்கு முன் விடுப்பு பதிவிட்டுக்கொள்ளலாம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்.
அரசு சார்ந்த வேலைக்கு sick leave எடுத்தால்., முதல் 3 மாதங்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும். அடுத்த 3-6 மாதங்களுக்கு 1/2 சம்பளம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்).
9 மாதத்திற்கு மேல் ., company based occupational therapist (mostly a doctor) நம்ம செக். பண்ணிட்டு ., வேலைக்கு திரும்பலாமா, இல்லையா என்று முடிவு செய்வார்கள்.  பிரசவகால விடுமுறையாக 3rd trimester ல இருந்து குழந்தை பிறந்த 9 மாதங்கள் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு வேலை செய்யுமிடத்தில் சலுகை உண்டு. ரொம்ப குனிந்து., நிமிர்ந்த வேலைகளை பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.

வரி மற்றும் நேஷனல் இன்யூரன்ஸ்

முதல் £11,875  வரை வரி கிடையாது. அதற்கு மேல் £34500 வரை 20% வரி. அதற்கு மேல் £150000 வரை 40% வரி. அதற்கு மேல் 50% (நிபந்தனைக்கு உட்பட்டது) கட்ட வேண்டும்.

நேஷனல் இன்யூரன்ஸ் (NI) 8 அல்லது 9 % மாத சம்பளத்தை அடிப்படையாக வைத்து பிடித்தம் செய்யப்படும். NI number  என்பது நம்மூருல PAN மாதிரி. NI காட்டுவதால் நமக்கு மருத்துவம் இலவசம்.

வரியும் , NI யும் மாதாமாதம் சம்பளத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகே நமக்கு சம்பளம் கிடைக்கும்.
இது போக வீட்டு வரி ., TV வரி (கேளிக்கை வரி) போன்றவை அடிப்படை வரிகள்.
VAT -value added tax ... இது இப்ப நம்ம ஊருல வந்திருக்குற GST மாதிரி. எல்லா வாங்கும் பொருளுக்கும் உண்டு. (நிபந்தனைக்குட்பட்டது).

இது போக வீட்டு அத்யாவஸ்ய தேவைகளான
மின்சாரம் , கேஸ் , தண்ணீர் எல்லாம் தனிதனியாக பைப் ல வரும். மேற்கூறிய மூன்றும் தனியார் மேனேஜ்மென்ட் ல உள்ள அரசுசார்பு நிறுவனங்கள். அவங்களுக்குள்ள போட்டி இருக்கும். விழாக்கால தள்ளுபடி எல்லாம் உண்டு.
தண்ணீர் - நாம எவ்வளவு உபயோகப்படுத்துகின்றோமோ., அதற்கு ஏற்ப கணக்கிடப்படும். அதுமட்டுமின்றி எவ்வளவு தண்ணிய drainage ல அனுப்புறோம் என்பதற்கும் கணக்கிடப்படும். (Waste management ., and recycling ல UK ரொம்ப அட்வான்ஸ்).
வீட்டு வரி, மின்சாரம், கேஸ் மற்றும் தண்ணீர் .... அடிப்படை தேவைகள்.., இவையனைத்தும் நம்மூருர விட காஸ்ட்லி தான். (வீட்டு வாடகையும் ஜாஸ்தி தான். அதுக்கு வீடே வாங்கிடலாம். EMI யும் வாடகையும் ஓரளவிற்கு ஒரே அளவாகத்தான் இருக்கும்.).

(* இங்க பெட்ரோல் ., டீசல் மானியம் கிடையாது. இன்னக்கி ரேட் நம்மூரு காசுக்கு பெட்ரோல் 103 ரூபாய்*).

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......