Part 6... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை

என் 14 வருட டிமெண்ஸியா நர்ஸ் வாழ்க்கையில்., மறக்க முடியாத ....,
தன்நிலை மறந்த ..,
சில நபர்களின் ..,
வாழ்ந்து மறைந்த வாழ்க்கையை தொகுத்து பகிரலாம் என்று நினைக்கின்றேன்.
பகிரலாமா?!......


டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.
(Living with dementia)

சராசரியா எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அரசாங்க வேலை. , நல்ல இடத்துல கல்யாணம். ., அறிவான குழந்தைகள்.., வீடு., அதுக்கு முன்னாடி போர்டிக்கோ வுல வண்டி.,
குழந்தைங்க கல்யாணம்., பேரக்குழந்தைங்க.
ரிட்டையர்டு ஆயி பென்சன். அடுத்து நிம்மதியான வாழ்க்கை. இது தான் எல்லாரும் நினைக்கிறது. அதில் எல்லா பகுதியவும் திட்டம் போட்டு வெற்றி பெற்றாலும்... ரிட்டயர்ட் ஆன பிறகு வரும் வாழ்க்கையை .... “இனிமே என்ன இருக்கு” என்ன எண்ண ஓட்டத்துல சரியா திட்டம் போடாம., அல்லல் படுவது .., அந்த நிலைக்கு வரும் போது தான் உணரமுடியும். அப்போ வர்ற எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூட யாரும் இருக்க மாட்டாங்க. இப்பலாம்., அடுத்தவங்க சொல்லுறத கவனிச்சு., கிரகிச்சு... பதில் சொல்லக்கூட பொறுமை இருக்காது. இதில் வயதானவர்கள் பேசுனாலே “வழவழன்னு பேசாதீர்கள். என்ன மேட்டர்னு சுருக்கமா சொல்லுங்கள்”., என்றும் , “பெருசு... சரியான அருவை”., என்றும் ஓடிவிடுவோம்.

ரிட்டயரட்மண்ட் வாழ்க்கை என்பது ஒரு தனி உலகம். “DIE BEFORE DISHONEST”. தமிழ்ல சொல்லனும்னா “ரோஷம்”... நம்மளோட மதிப்பும் ., மரியாதையும் குறையுறதுக்குள்ள இறந்துடனும். உலகத்துல சக்ரவர்த்தியா வாழ்ந்தவங்க கூட..., முதுமைல... மரியாதை இழந்து கூனிகுருகி .,....
உலகத்தையே கண்பார்வையில அடக்கி வைத்திருந்து வாழ்ந்தவர்கள்......
3 X 6 படுக்கையே உலகம்னு வீழ்ந்து மடிந்திருக்கிறார்கள்.
பயமுறுத்தவில்லை. இப்பலாம் 60 வயதுக்கு மேல உள்ளவங்க., பெரும்பாலும் தனியாக தான் வாழ்கிறார்கள். வார கடைசிக்கு ஏங்கி காத்திருப்பார்கள். பிள்ளைகள் ., பேரபிள்ளைகள் வருகையை எதிர்பார்த்து. ...

இதில் பேரபிள்ளைகளை கவனிப்பதற்காக., வேலைக்கு செல்லும் பிள்ளைகளின் வீட்டில் இருப்பவர்கள் தனி இனம்.

இதில் பெரிய சவால் “DEMENTIA”.
நம்மூருல சராசரி ஆயுட்காலம்.., தோராயமாக 68 - 73
இங்கிலாந்தில் 79 - 82 .
அதிலும் 2000 ஆண்டுக்கு பிறகு 90வயதுடையோர் சதவீதம் உயர்ந்துள்ளது.
அதில் 89% பேர் DEMENTIA விற்குள் வந்து விடுகிறார்கள்.

ஒருவருக்கு dementia என்று கண்டறிந்த நாள் முதல்., ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்தது இறக்கும் வரை.
இங்கு நல்ல உடல்நிலையில் இருக்கும் ஒருவரின் உயில் இது தான். “எனக்கு dementia வந்தால்..., வீட்டிலேயே வைத்து பார்க்கவும்.., நர்ஸிங் ஹோம் க்கு அனுப்பி விடாதீர்கள்”..
ஆனால் அவர்களுக்கு இந்த கடைசி ஆசை ... நிராசை தான்.
மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களின் சாபக்கேடு “dementia”...  நம்மூரிலும் அரிதாக இருந்தது ஆனால் அசுர வேகத்தில் ஆட்கொண்டு கொண்டிருக்கிறது.


ஜெப்ரி மார்ஷ் (Geoffrey Marsh)

இவர என்னால மறக்க முடியாது. நான் வேலைக்கு சேர்ந்த ஒரு வாரம் கழிந்து என் வார்டு .. மன்னிக்கவும் .., வீடு ... இந்த வார்த்தை தான் பொருத்தமாக இருக்கும்.
 Primerose house (ப்ரிம்ரோஸ் ஹவ்ஸ்) இது 30 அறைகள் கொண்ட வீடு. இந்த வீடு அட்வான்ஸ் டிமெண்ஸியா வந்தவர்களுக்கானது. இங்கு இருப்பவர்கள் அனைவரும் 70 வயதை தாண்டியவர்கள். தன் பெயர்., மனைவி மக்கள் பெயர் (பெரும்பாலும்)., தாய் தந்தை பெயர் .., குறிப்பிட்ட சில நண்பர்கள் பெயர் தவிர யாரையும் தெரியாத நிலையில் இங்கு அட்மிஷன் ... (மறுபடியும் மன்னிக்கவும்) குடி வருவார்கள்.

ஜெப்., அந்த நிலையில் தான் வந்தார். 90 வயது. இந்தியன் தாத்தா கமல் மாதிரியான தோற்றம். அதே ஹேர்ஸ்டைல்.
இவரைப்பற்றி ...
ஜெப்ரி ஜான் மார்ஷ் அவங்க பெற்றோருக்கு ஒரே மகன். அம்மா அவரது 10 வயதில் இறந்துவிட., தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார். சித்தி மூலம் இவருக்கு ஒரு தங்கை    ஐலீன். ஐலீன் தான் Care of ஜெப். ஐலீன் திருமணம் செய்யாமல் தனித்தே வாழ்ந்தவர். இவர் மூலமாகத்தான் ஜெப் பற்றி பல விசயங்கள் தெரிய வந்தது. ஜெப் ., தங்கை., சித்தி மேல் பாசம் அதிகம். தந்தை குதிரைகளுக்கு லாடம் செய்து மாட்டிவிடும் பட்டறை வைத்திருந்தார். இன்றைய சூழலில் கார் வாங்கி விற்கும் தொழிற்சாலைக்கு நிகர். மன்னர் குடும்ப குதிரைகளுக்கு கூட இவர் பட்டறையில் இருந்து தான் லாடங்கள் வாங்கப் பட்டனவாம்.

      ஜெப் க்கு இந்தியா.. ரொம்ப பிடிக்கும். அவரது 25ம் வயதில் (1039 ஆம் ஆண்டு) கல்கத்தாவில் மரைன் பொறியாளர் வேலை. ஜெப் .., தனது 19ம் வயதில் 20 வயது க்வென்டலைன் (அ) க்வைன் - தன் பள்ளித்தோழியை கரம் பிடித்தார்.
வெள்ளைக்காரர்கள் என்றாலே “டேக்கிட் ஈஸி காதல் பண்ணுவாங்க ன்னு தான் அது வரை நினைத்து இருந்தேன். அவர் ப்ரிம்ரோஸ் ஹவ்ஸ்க்கு வந்த நாளிலிருந்து சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான் இருவருக்கும் 70 ஆம் ஆண்டு திருமண நாள். அந்த அளவிற்கு அவர்களிருவரிடத்திலும் அந்யோன்யம். அந்த 70 வருட வாழ்க்கையில் க்வைன் ஐ பிரிந்தது இல்லை. இது அவரது முதல் நாள் இங்கு குடி வந்ததும் ... அன்பு மனைவியை பிரிந்ததும்.
இருவருக்கும் ஒரு மகன் ஆன்டணி மார்ஷ். வயது 70. அவர் ஆஸ்திரேலியாவில் கடந்த 45 வருடங்களாக. கடந்த 10 வருடங்களாக .. தற்போது 79 வயதான தங்கை ஐலீன் தான் ஜெப் பின் ஒரே சொந்தம். இருவரும் சேர்ந்து க்வென் ஐ பராமரித்து வந்தார்கள்.
ஆம் .... க்வைன் க்கு 10 வருடமாக டிமெண்ஸியா.
நமக்கு வரும் நோய் ., நொடி .. உடம்பு வலியை விட நம்ம குடும்ப நபர் (பிள்ளையோ ., வாழ்க்கை துணையோ) படும் கஷ்டங்களை பார்த்து வரும் “ மன வலி “ .... விவரிக்க முடியாது. கடந்த 10 வருடங்களாக அத்தகைய வலி தான் ஜெப்க்கு.  தவிர சிறுவயதில் ..., வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப .., ஜெப் “பியர்” பிரியர். தினமும் ஒரு 3 லிட்டராவது குடிப்பாராம். இது தான் அவர் டிமெண்ஸியாவுக்கு உண்டியல் போட ஆரம்பித்தது.
ஜெப் க்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் டிமெண்ஸியா என்று கண்டறிந்தார்கள். மிகவும் குழப்பமான மனநிலையில், ஐலீன் கூட வார்த்தை விவாதத்தில் இருந்துள்ளார். “நீ க்வென் ஐ சரியாக பார்த்துக் கொள்வதில்லை., நேரத்திற்கு உணவு தருவதில்லை” , என்று. ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் ஐலீன், க்வென் ஐ பராமரித்துள்ளார். வீட்டுக்கு வந்த தாதியும் அதை உறுதி செய்துள்ளார். இதை கூறியதும் , என்றுமே அன்பாக, அமைதியாக பேசும் ஜெப் .., கடுமையாக பேசியுள்ளார். “ என்னை பொய்யன் என்று நினைத்தாயா?!”...
முதலில் சகோதரனுக்கு மனஅழுத்தம் காரணமாக இப்படி பேசுகிறார் என்று நினைத்த ஐலீன்... அடிக்கடி., சற்றுமுன் நடந்தவைகளை அண்ணன் மறப்பதை அறிந்து கொண்டார். அதுவும் தன்னிடம் மட்டும் இவ்வாறாக நடப்பது மேலும் ஐயத்தை ஏற்படுத்தியது ஐலீனுக்கு.
எப்போதும் சூட் அணிவதில் perfection னாக இருப்பார் ஜெப். அவர் டை கட்டும் விதமே தனி.
ஆனால் அன்று மாறுகால் காலணி அணிந்திருந்தது ஐலீனுக்கு ஆச்சர்யம்.
தினமும் மழுங்க சேவிங் பண்ணும் ஜெப்.., அன்று மறந்து இருந்தார். விரும்பி குடிக்கும் ப்ளாக் காபி தொடாமல் ஆறி இருந்தது. அவர் உடுத்தி இருந்த இரவு உடைக கால்சட்டையை லாண்டரி பையில் காணவில்லை. உற்று நோக்கிய போது அதை கழட்டாமலே ..., அதன் மீது சூட் அணிந்திருந்தார் அண்ணன்.

 ஐலீன்., “அண்ணா... இன்று நீங்கள் காலை 10 மணிக்கு டாக்டரை பார்க்க நேரம் வாங்கி இருந்தீர்களே..?! போகலாமா?..”

ஜெப், “நான் அதை மறக்கவில்லை ஐலீன்.., நீ தான் இன்னும் கிளம்பவில்லை. உனக்கு வர வர மறதி அதிகமாகிவிட்டது தங்கையே”,.
ஐலீன், “இல்லை அண்ணா.. வழக்கமாக வரும் நர்ஸ் இன்னும் வரவில்லை.., வந்ததும் க்வென்னை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கிளப்பலாம்”., உங்களுக்கு சம்மதம் தானே?!..
உண்மையில் ஐலீன் தான் அண்ணனுக்காக, டாக்டரிடம் நேரம் வாங்கி இருந்தார்.

பின்பு க்ளினிக் சென்றதும்., ஜெப் பின் சிறுநீரில் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அதனால் தான் இப்படி மனக்குழப்பமும், எரிச்சலும் வருகிறது என்று கண்டறிந்தார்கள்.

டாக்டர், “மிஸ். மார்ஷ்.., ஜெப் க்கு ஆன்டிபயாட்டிக் ப்ரிஷ்கிரைப் பண்ணியுள்ளேன். அதை ஒரு வாரத்திற்கு எடுத்துக்கொள்ளட்டும். சிறுநீர் தொற்று சரியானவுடன் இவருக்கு சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.... அவ்வாறு இல்லாவிடில்., மேற்கொண்டு சிகிச்சையை தொடருவோம். அதோடு சைக்காட்ரிஸ்ட் மூலம் இவரை அசஸ்மண்ட் பண்ண வழி செய்கிறேன். உங்களுக்கு விருப்பம் தானே”..?!!
திருப்தி அடைந்த ஐலீனால் அன்று இரவு வரை கூட... ஜெப் பை சமாளிக்க முடியவில்லை. ஜெப் இப்பொழுது ., நடுவில பக்கத்த காணோம் நிலைமைக்கு ஆளாகி இருந்தார். திரும்ப., திரும்ப... க்வென்னை பற்றி ஐலீன் னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஐலீன்.., க்வென் மேல் இருந்த கவனம் விலகி ., ஜெப் மேல் திரும்ப வேண்டி இருந்தது.
அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜெப்... மாலையில் அடிக்கடி ., பொறுமை இழந்து கேட்க ஆரம்பித்தார். ஐலீன் னால் ..  அவரை ஓரளவிற்கு மேல் “சூழ்நிலை இயல்பு” ஆதரவை கொடுக்கமுடியவில்லை. (Reassurance).
ஒரு கட்டத்தில், ஜெப்..., “ என் கார் சாவியை எங்கே? கடைக்கு செல்லவேண்டும் ..”, என்று அடம் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டார்.
படுத்த படுக்கையாக இருக்கும் க்வென் ஒருபுறம் .., ஐலீனுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. மாலை 7 மணி அளவில் க்வென் ஐ பராமரிக்க வீட்டுக்கு வந்த நர்ஸ் ., நிலைமையை உணர்ந்தார்.. அடுத்த ஒரு மணி நேரத்தில்,ஜெப்.., மத்திய மருத்துவமனையில்.
ஒரு வாரம் கழித்து, சிறுநீர் தொற்று சரியாகிவிட... , மருத்துவமனையில், ஜெப் பிற்கு தலையில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்கள். ரத்தமாதிரியும் சோதனை செய்யப்பட்டது.

ஜெப் .. வாஸ்குலர்டிமெண்ஸியா வுடன் வாழ்கின்றார் என்று உறுதி செய்யப்பட்டு நான் இருக்கும் நர்ஸிங் ஹோமிற்கு குடிமாறுதல் செய்யப்பட்டார். (10 டிசம்பர் 2004).

குறிப்புகள்:-
இங்கு “ he/ she is suffering from dementia” என்று சொல்லவோ, எழுதவோ கூடாது.
“He / she is living with dementia” என்று தான் குறிப்பிட வேண்டும். ஏனென்றால், முதுமையை போல் dementia வும், வாழ்க்கையில் ஒரு கட்டம். மனநோய் இல்லை.

உடலானது 32 வயதிற்கு மேல் படிப்படியாக ஆக்க கூறுகளை ... மெதுவாக செய்ய ஆரம்பித்து ஒரு நிலையில் ஒவ்வொரு உறுப்பாக., தனது வேலையை நிறுத்தத் தொடங்கிவிடும். அதில் மூளையும் விதி விலக்கல்ல.

மூளை... அற்புதமான உறுப்பு. ஒரே நேரத்தில் பல வேலைகளை multitasking பண்ண வைப்பது. ஆழ்ந்த தூக்க நிலையை தவிர மற்ற தருணங்களில் எதையாவது ., எண்ணிக்கொண்டு இருக்கும். அது ஒளியின் வேகத்தை விட வேகமானது.

மூளை செல்கள்., ஒவ்வொரு சேம்பரிலும் ஒரு அட்மினிஷ்ரேட்டிவ் டிபார்ட்மெண்ட் வேலையை செய்கின்றன. அதற்கு பெரும்பான்மையான மூளை செல்கள்.., மெமரி கார்ட் மாதிரி ., storage ., regaining., remembering ., retrieving செய்து கொள்வது அவைகளின் டூட்டிஸ் அண்டு ரெஸ்பான்ஸிபிலிட்டிஸ்.
அவற்றிற்கு தேவையான சம்பளத்தையும் , ஊதிய உயர்வையும்., ஓய்வெடுத்துக் கொள்ள நேரத்தையும் (விடுப்பு) சரிவர கொடுக்காவிட்டால்...... ட்ரைக் பண்ண ஆரம்பிக்கும். இல்லையானால் அதன் நலம் கெட்டு ஒவ்வொரு பகுதி செல்கள் இறக்க ஆரம்பிக்கும். அல்லது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும். அவ்வாறு செய்யும் போது..., அந்த செல்களில் இருந்த நினைவுகள்.... நன்றாக இருந்த நிலையில் பதிந்த நினைவுகள் அப்படியே இருக்கும். ஆனால் நினைவலைகள் கானல் நீராக மங்கி சரியாக வெளிப்படாது. அந்த மூளை செல்களில் புதிதாக எந்த நினைவுகளும் நிலையாக பதியாது. நாட்கள் ஆக .., ஆக பதியும் நேரம் குறைந்து ..., பதியவே இயலாது. அந்த நிலையில் ., உடம்பு வெறும் உயிருள்ள பிணம் தான்.
Dementia ...is  irreversible. It makes us to think .., can be slow down the progressing of the condition. But ....


ஜெப்.,  இங்க குடி வந்தபோது ... “மென்டல் கெபாசிடி அசஸ்மென்ட்” பண்ண வேண்டிய வேலை என்னிடம் வந்தது.
டிமெண்ஸியா ஆரம்பநிலை.. வெளி தோற்றத்தில்., அவர் இங்கு வந்து தங்கியிருக்கும் மற்ற சர்வீஸ் யூசர் போல் இல்லை. அவர்களை பார்க்க வந்த உறவினர் போல் இருந்தார். கோட், சூட் போட்டு பர்பைக்ட் டா .. ஜேம்ஸ் பாண்ட் க்கு 90 வயது ஆனவர் போல் இருந்தார்.
நான், “மிஸ்டர். மார்ஷ். .., நான் இங்கு நர்ஸ். உங்களிடம், உங்களை பற்றி சில தகவல்கள் சேகரிக்க வந்துள்ளேன். உங்களுக்கு சம்மதமா?!”,,
ஜெப்..  “அப்கோர்ஸ்.. யங்மேன். நீங்க இந்தியாவா?”

இப்படி சென்றது எங்கள் பேச்சு.

(அசஸ்மண்ட் 1- cognition ல எந்த தொந்தரவும் இல்ல )

நான் .., “ஜெப் ... உங்களிடம் ஒரு கேம் விளையாட விரும்புகிறேன்... உங்களிடம் மூன்று வார்த்தைகள் சொல்வேன். அதை மீண்டும் சிறிது நேரம் கழித்து கேட்பேன். அப்போது நீங்கள் சொல்ல வேண்டும்.... சரியா?!..”
1) வாட்ச்
2) ஆப்பிள்
3) குதிரை.

அதற்கு அப்புறம் அவர் கல்கத்தாவில் இருந்த காலத்தைப் பற்றி சொன்னார். மரைன் வாழ்க்கையை சொன்னார். பர்மா பற்றி நிறைய சொன்னார். அவருக்கு ஆர்வம். நான் அவர் சொல்வதை மௌனமாக., இமை கொட்டாமல், அவரை பார்த்த படி கவனிப்பது .., உற்சாகம் தூண்டியது என்று தான் சொல்வேன்.

10 நிமிடங்கள் கழிந்தன.
நான் தருணம் பார்த்து... “ஜெப் ., நான் அப்போது சொன்ன வார்த்தைகள் நியாபகத்தில் உள்ளனவா??..”
ஜெப் , “வொய்நாட்.... குதிரை.., வாட்ச்., அப்புறம் ஆப்பிள்.., சரிதானே?!!’..
நான் , “ஜெப் .. நீங்க பெரிய ஆள்”.. நல்லா ஞாபகம் வச்சுருக்கீங்க.”..
(ஆர்டர் மாறினாலும்.. சொன்ன வார்த்தைகள் சரியானவை )
ஆனால் அதன் பிறகு ..., அடுத்த 15 நிமிடங்களில் கேட்டபோது ... அவர் சொன்னது., குதிரை மற்றும் வாட்ச் மட்டும் தான். ஆப்பிள் மறந்து போனது. நான் யாரென்று கேட்ட போது., “ டாக்டர்” .. என்றார்.
முதல்நாள் இரவு ., ஜெப் தூங்கவே இல்லை. க்வென்., ஐலீன் பற்றி 5 நிமிடத்திற்கு ஒரு முறை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஜெப், ஒரு பியானோ ப்ளேயர்.. க்வென் னும் தான். இருவரும் ஒரே பியானோவை ஒரே நேரத்தில் .., அதாவது நான்கு கைகளும் கோர்வையாக வாசிப்பார்களாம்.
அவரது மனதை திசைதிருப்ப ., ஹவுஸில் இருந்த பியானோ தான் உதவியது.

சொந்த வீட்டில் கடந்த 50 வருடங்களாக ., மனைவியோடு வாழ்ந்தவர்... , இன்று ., இனிமேல் இங்கு தான் வாழப்போகிறோம் ., என்பது தெரியாமல்....
அவரது., அப்போதைய எண்ணம். “இன்று ஒரு நாள் மட்டும் இந்த மருத்துவமனை வாசம்... நாளை வீட்டுக்கு சென்றுவிடுவோம்”
அடுத்த ஒரு வாரம்.. ஜெப் க்கு யுகமாக கழிந்திருக்க வேண்டும். அவரிடம் முதலில் பணிவாகவும் அன்பாகவும் பேசிய ஸ்டாப்ஸ் எல்லாம் சில நேரம் பொறுமை இழந்தனர். அந்த அளவுக்கு திரும்ப திரும்ப பேச ஆரம்பித்தார்.
எல்லாம் மனைவியை பற்றியும் , தங்கையை பற்றியும் தான் இருக்கும். அவருக்கு ட்ரையாங்குலைஸர்கள் மாத்திரை வடிவில் தரப்பட்டன. கொஞ்சம் ரிலாக்ஸாக ஆனார். டாக்டர்., நர்ஸ் நீங்கள் எங்கள் புலமையை நினைத்து பெருமை யாக பேசிக்கொண்டோம். அவரை சாந்தப்படுத்தியதாக எண்ணி..
ஜெப்... எந்த விசயத்தையும் திட்டமிட்டு.. நேரப்படுத்தி.. செய்பவர். அவருக்கு கீழ் 1000 பேர் வேலை செய்தனர். மோட்டார், விவசாயம் எல்லாம் என்ன கேட்டாலும் சொல்லுமளவிற்கு ஞானம். தந்தையின் பட்டறையை கூட வெளியிலிருந்தே ஆளும் ஆற்றல்....
இன்று .. அவர் மனதில் இருப்பது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான்.
“என்னாச்சு”., “ஏன்”.. எங்க இருக்கேன்.

இந்த கேள்விகளை ஹவுஸ் ஊழியர்களிடம் கேட்கும் வரை பிரச்சனை இல்லை.
இதை ., தன்னை போன்று இங்கு வாழும் சக மனிதரிடம் கேட்டா......
கேட்டார். அவரும் இவரை போல கண்ணாடி பிம்பம் தான்.
“அறிவில்ல... எத்தனை முறை இதையே கேட்ப... அப்பாலே போ”.., 
“சுருக்” என்று இருந்திருக்க வேண்டும் ஜெப் பிற்கு. பாவம். முதன் முதலில் .. தன்னை யாரோ ஒரு புதிய நபர் திட்டுகிறார் என்றால்.....

DIE BEFORE DISHONOUR.

நாளை மறுநாள் .. ...



Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......