Part 7... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

கடைசி ஒரு வாரம் நான் ரொம்ப பிசி.
இதோ ஜெப்.., நர்ஸஸ் ஹோமிற்கு வந்து ஒரு வாரத்தில் ஜெப்பின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இளம் ஸ்டாப்கள் .. குறிப்பாக பெண்கள், நிறைய சிரமம் அடைந்தார்கள். அவர்களிடம் ஜெப் ஒத்துப்போகவில்லை. ஆயிரம் இருந்தாலும் வயது குறைந்த புதிய நபர்கள் , அவர்கள் முன்னிலையில். ..தன்னை ஆடைகலைய கூறும்போது மனரீதியாக சஞ்சலம் அடைந்தார். ஆகவே பெரும்பாலும் ஆண் ஊழியர்களே அவரை கவனித்தோம். நாம் கேட்பதற்கு சம்பந்தமே இல்லாத பதில்களை கூற ஆரம்பித்தார். Incoherent speech due to poor cognition.
பெரும்பாலும் அவருடன் .. அவரும் க்வென்னும் வாழ்ந்த இளமை பருவ நிகழ்வுகளை பற்றி கேட்டால் ஆர்வத்துடன் பதிலளிப்பார். அந்த யுத்தி பல நேரங்களில் உதவியது. 90 வயதிலும்.., அவரது 16 -19 வயது காதல் பயண நினைவுகள் எள்ளளவும் பிசிராமல் அப்படியே இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். முதன்முதலில் அவரிடம் க்வென் அன்பை சொன்னது., இவர் க்வென்னிடம் கல்யாணம் பண்ண கேட்டது... அப்ப்போது அவர்கள் இருந்த இடம்., அணிந்து இருந்த ஆடை.. எல்லாம் சொல்லுவார். டோணி (அத்தோணி - அவர்களது மகன்) பிறந்த தினம்., வளர்ப்பு பற்றிய கனவு எல்லாம் சொல்லுவார். தன் உணர்வுகளை அறிந்து கொள்ள விரும்புவோர்களிடம் தன்னை அறியாமலேயே ஒரு பிரியம் வரும். அதே தான் ஜெப்பிடமும் ., எப்படியும் அவர் சொல்லி முடிக்க 10 நிமிடங்கள் ஆகும். அதுவரை பொறுத்து .., பின் அவரை குளிப்பதற்கும் ., ஆடை மாற்றுவதற்கும் தயார் படுத்துவோம். நான் டூட்டியில் இருந்தால் ., என்னைத்தான் கேட்ப்பார்கள். என்னிடம் அவருக்கு நட்பு அந்த அளவிற்கு இருந்தது. ஜெப் என்னை ஆண்டி என்று தான் அழைப்பார்.
காரணம் 1- அது , அவர் மகன் பெயர். (அந்தோணியை ஆண்டி அல்லது டோணி என்று சுருக்கமாக அழைக்கும் வழக்கம் இங்கு).
காரணம் இரண்டு .. அருள் நீதி தேவன் என்ற பெயர் யார் வாயிலும் நுழையாது. அதனால் நான் இங்கு வந்த புதிதில்... A rul N eethi T hevan என்பதை சுருக்கி, ANT என்றாகி .., பின் ANTY என்று கூப்பிடுவார்கள்.
அவருக்கு rice pudding என்றால் கொள்ளை பிரியம். இங்கு உணவில் கடைசியாக... pudding சாப்பிடுவது tradition.

நம்மூரில பாயாசமோ., அல்லது ஏதாவது இனிப்போ சாப்பிடுவோமே .. அது மாதிரி.
Rice pudding - எளிமையா சொல்லனும்னா.. நம்ம இனிப்பு பொங்கல்.
அத வச்சே அவர பெரும்பாலும் சமாளிப்பேன். ஊருல எனக்கு டை கட்டி., பழக்கம் இல்லை. ஜெப் தான் சொல்லிக்குடுத்தார். திருமணம் ஆனவர்கள் கட்டும் விதமும்., ஆகாதவர்கள் கட்டும் விதமும் வேறு என்பது... அவர் சொல்லித்தான் எனக்கு தெரியும். நான் வேலைக்கு சேர்ந்த புதிது என்பதால்., ஆங்கிலேயர்கள் பழக்க வழக்கம்.., அவ்வளவாக எனக்கு தெரியாது. சாப்பிடும் போது ., முள் கரண்டியையும்., கத்தியையும் எப்படி பிடிக்க வேண்டும்., சாப்பிட்ட பிறகு எப்படி அதை வைக்க வேண்டும் என்பதை அவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.
மதியத்திற்கு மேல் பெரும்பாலும் ஹோமில் உள்ளவர்களை என்டர்டைன் பண்ணுவோம். ஜெப் அதுல மத்தியமாக இருப்பார். கீ போர்ட் வாசிப்பது., பாடுவது., அதற்கேற்ப மெல்லிய நடன அசைவுகள்.... ஜெப் உண்மையான ஹீரோ. அவரை பாராட்டும் போதும் .,
எல்லோருக்கும் ...
அடுத்தவர் தம்மை மதிப்புடன் பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் அளாதி கர்வம் தானே..
Feeling as “being valued”.

அப்படி பட்ட தருணங்களில் ., அவர்., வந்த முதல் வாரத்தில் இழந்த பேச்சு வழக்க மாறுதலில் (incoherent on speech) பயனுள்ள மாறுதல் தெரிந்தது.
சுருக்கமாக, தெளிவாக ...  அதே நேரம் அவருக்கு பிடித்த topic ல பேசும்போது ., அவரிடம் incoherent இல்லை. அதனால் அவருக்கு confusion னும் கொஞ்சம் குறைந்தது என்று தான் கூற வேண்டும்.
உலகில் எல்லா இடத்திலும் ., நல்லவர் , கெட்டவர் ., திறமைசாலி., அல்லாதவர் உண்டு. அப்படி த்தான் இங்கும் சில ஊழியர்கள் பொறுமை இல்லாமல் அவரை துரிதப்படுத்தும் போது... மேற்கண்ட நல்ல பழக்க வழக்கங்கள் அவரிடம் மறைக்கப்பட்டன. அப்போது அவர் வயலன்ட்டாக., தொடர்பில்லாத வாக்கியங்களில் பேசவும் செய்தார். அப்படி என் கூட இருக்கும் ஒரு நர்ஸ் இருந்தார். அவர் என்னை விட பலமடங்கு திறமைசாலி. ஆனால் ஜெப் விசயத்தில் எனது பழகும் விதம் அவரை காட்டிலும் நல்ல விதத்தில் பயன்படுவது ... அவருக்கு ஒரு சின்ன ஈகோ. மற்றபடி அந்த நர்ஸ் எனக்கு பல விசயங்களில் உதவி செய்துல்லார். அவர் டூட்டியில் ., ஜெப் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பிரச்சனை தந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்த நர்ஸ் .. என்னிடம் கேட்டார். “எப்படி நீ சமாளிக்கிறாய்?!”
நான், “சோ சிம்பிள்... (அவர் பெயர்) .., நான் என்றும் ஜெப் பிடம்.., டாமினேட் பண்ணி பேசியது இல்லை. (உண்மையிலேயே வேலைக்கு சேர்ந்த புதிதில் .. அந்த அளவுக்கு எனக்கு கான்பிடன்ட் இல்லை என்பது தான் உண்மை.) அது ஜெப் பை ஈசியாக பேச வைத்தது. நான் ஜெப் பை பேசவிட்டு .., அவர் போக்கில் சென்று .., தருணம் பார்த்து நான் சொல்ல வேண்டியதை சொல்லி அவரை இணங்க வைப்பேன்”.
அவர் ஒன்றும் குழந்தை இல்லை. எல்லாவற்றையும் சொல்லி.. இதை செய்.., இதை செய்யாதே!.. என்று நிர்ப்பந்தம் பண்ண.
தவிர வாழ்க்கையில் ரொம்ப பெரிய இடத்தில் இருந்த மனுசன் அவர். திடீரென்று புதிதாக ஒருவர் நமக்கு அட்வைஸ் பண்ணா .., யாருக்கு பிடிக்கும். ஆரம்பமே அதோகதி ஆயிடும்ல ...

என் சக நர்ஸ் .. நான் சொல்வதில் உண்மையை புரிந்து கொண்டார். நிஜம் தான். அதுவரை மாற்று கருத்து.., ஈகோ என்று இருந்த நண்பர் திக் ப்ரெண்ட் ஆயிட்டாரு. (இப்போது வேறு ஊரில் வேலை பார்க்கிறார். இன்றும் நட்பு தொடர்கிறது. )
அதுவரை அவர் .. ஜெப் பிற்கு ட்ரையாங்குலைசர் வேண்டும்., ப்சைகியாட்ரிஸ்ட் ரீஅசஸ்மெண்ட் வேண்டும் என்று டாக்டரை வற்புறுத்தியவர் ... இன்னும் கொஞ்ச நாள் தான் பார்ப்போமே.. என்று நினைக்கும் அளவிற்கு மாறினார்.

என்ன தான் நாங்கள் புத்திசாலியாக யோசித்தாலும் ... மாலை நேர மன அழுத்தம் ., எரிச்சல் ஜெப் பிற்கு குறையவே இல்லை.
இது தான் dementia.
அவருக்கு Evening Down syndrome தான் பெரிய பிரச்சனை. ரொம்ப ரெஸ்ட்லெஸ் ஆயிடுவார். வேறு வழியில்லை. டாக்டர் அவருக்கு டயசிபாம் ப்ரிஸ்கிரிப்ட் பண்ணிணார். மதியம் ஒரு டோஸ் 2 mg. இரவு ஒரு டோஸ் 2mg. மாத்திரைகள்.
மதியம் சிரம்மில்லாமல் accept பண்ணுவார். ஆனால் இரவில் பல நேரம் அவரை மாத்திரை எடுத்துக்கொள்ள வைப்பதற்குள் .. போதும் போதும் னு ஆயிரும். “என்ன கைய புடிச்சு இழுத்தயா?” வடிவேலு மாதிரி ஆர்கியூ பண்ணுவாரு.


நம்ம ஊருல இன்ஜெக்‌ஷன் போட்டாத்தான் பேஷன்ட் .., ட்ரீட்மென்ட் டயே நம்புவாங்க. ஆனா இங்க ., ஊசி போடுறத பெரும்பாலும் ஒதுக்கிடுவாங்க. எந்த அளவிற்கு எளிதான முறை இருக்கோ அதை தான் முதலில் செய்வார்கள்.

 MEDICATION CODE OF PRACTICE IN NMC
 ஐந்து “ R “கள் use பண்ண வேண்டும்
1) right person
2) right medicine
3) right dose
4) right route
5) right time.

இது போக  aim of maintaining dignity and person centre care

6)right to refuse by the person.
ஆம் .. இங்க நல்ல மனநிலையுள்ள நபர்கள் எனக்கு இந்த சிகிச்சை வேண்டாம் என்று கூற உரிமை உண்டு.

ஜெப் விசயத்துல .. எப்படி... இவரு எனக்கு வேணாம் னு அடம்புடிக்கிறாரு. சரி அவர் விருப்பப்படி குடுக்கல. சட்டம் போட்ட நீங்க வந்து அவருகூட ஒரு 30 நிமிஷம் இருந்து பாருங்க ... அப்ப தெரியும். என்ன தான் பண்ண.???

இப்படி பட்ட சூழ்நிலையை சமாளிக்க ..  இங்க விதி இருக்கு.
MENTAL CAPACITY ACT 2005
குறிப்பாக இங்க எங்க ஹோம்க்கு வர்ற எல்லோரையும் முதல்ல mental capacity இருக்கா ன்னு assess பண்ணுவோம்.
Early dementia ல பெரும்பாலும் capacity இருக்கும். 50 சதவீதம் பேருக்கு variable capacity இருக்கும். அதாவது சில நேரம் சரியா இருக்கும். சில நேரம் பாதி சரியா இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல ... சுத்தமாக இருக்காது. ஜெப் க்கு அப்போ.. variable capacity.
Capacity இருக்குறவங்க “NO” சொன்னா ., பல சூழ்நிலைகளுக்கு அவர்களின் decision (முடிவு) களுக்கு மதிப்பளித்து நடந்துகொள்ள வேண்டும்.

Variable capacity ., lack of capacity இருப்பவர்கள் “NO” சொன்னா...
இங்க ஒரு அஸ்திரம் உபயோகப்படுத்துகின்றோம்.

DOLs.

Deprivation of Liberty safeguards.
நோக்கம் -    மருத்துவமனை., நர்ஸிங் ஹோம்
சிகிச்சை .,  இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருக்கும் நபர்கள் ., அவர்களின் உரிமையை inappropriate டா தீண்டாம ..  குறைந்த restriction மூலம் அவர்களின் தேவையை best interest (முடிந்த அளவிற்கு நல்லவிதமான வழியில்) நிறைவேற்றுவது.

காமெடியா சொல்லனும்னா...
“முட்டாப்பயலே” அப்புடின்னு திட்டுனா.. inappropriate. Divinity ய affect பண்ணும்.
“அன்பானவரே ., நான் ., உங்களை .., இந்த விசயத்தில் “அறிவை உபயோகிக்காதவர்”, என்று ஏன் கூறக்கூடாது”.,  ..... இது best interest .  இதுல நாம , குறிப்பிட்ட நபர் கிட்டயே .. அவரை திட்ட அனுமதி வாங்குனா .. அவரு ok சொன்னாலும் , சொல்லாட்டாலும் ., திட்ட வேண்டியத சொல்லிக் காமிக்கிற மாதிரி திட்டீட்டோம்ல.
😁😁😁


இப்படி lack of capacity இருக்குறவங்கள கட்டுப்படுத்த Safe guarding team னு ஒரு department இருக்கு. அங்க அனுமதி வாங்கி., best interest யூஸ் பண்ணி சிகிச்சை அளிக்கலாம்.
ஜெப் க்கு அந்த முறையில் சிகிச்சை வழங்க அனுமதி பெற்றாலும்... மருந்து கொடுப்பதில் சில வரைமுறைகளை நாங்க கடைபிடிக்க வேண்டும்.
அதாவது “COVERT ADMINISTRATION OF MEDICATION”

மாத்திரையை விருப்ப பட்ட உணவோடு கலந்து கொடுப்பது.
இதற்கு டாக்டர்., மருந்தாளுனர்., ஐலீன்... இவர்களிடம் அனுமதி வாங்க வேண்டும். மருத்தாளுனர் ., அந்த மருந்தை உணவோடு கலந்தால் ருசி மாறாமல் இருக்குமா? என்று பார்ப்பார்.
டாக்டர் .. , அந்த மருந்தை அப்படியே கலந்து கொடுக்கலாமா... இல்லை அரைத்து சேர்க்கலாமா? என்று பார்ப்பார். மேலும் உண்மையிலேயே ..  ஜெப் மறுக்கிறாறரா ?!!! என்று ஒரு வாரம் பார்ப்பார். (சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும்).
எல்லோரும் form ல கையொப்பம் போட்டதும் ... நாங்க ., உணவில் கலந்து கொடுப்போம்.
ஜெப் விரும்பும் ., rice pudding தான் வழக்கம் போல உதவி செய்தது.
அடுத்த இருவாரத்திற்கு பரிசோதனை காலம்
 என வரையறுக்கப்பட்டு .. சிகிச்சை தொடர்ந்து. அதற்கு அப்புறம் இதை தொடரலாமா .., இல்லையா? என்று டாக்டர்
நம்மிடம் கலந்தாலோசிப்பார்.

Comments

Popular posts from this blog

செவிலியர் உறுதிமொழி

செவிலியம் பற்றி திரு.பா.மணிகண்டன் அவர்கள் உரை....

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......