Posts

part 4....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

*10. தேர்தல் :* *(1) பொது விதிகள் :* *>* சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், தேர்ந்தெடுக்கப்படவும் சம உரிமை உள்ளது. *>* மாநில சங்கத்திற்கு ஒவ்வொரு *மூன்று ஆண்டுகளுக்கு* ஒருமுறை தேர்தல் நடைபெற வேண்டும். *(எனது கண்ணோட்டத்தில் மாற்றம் :* *முந்தைய அத்தியாயங்களில், பல இடங்களில் மாற்றத்திற்கான முக்கியத்துவம் அறிந்து அதனை மாற்ற வேண்டும் என்று கூறினேன். இந்த இடத்தில் மாற்றம் கண்டிப்பாக கூடாது என்பதை வலியுறுத்திக் கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த சங்கத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. மூன்று அணிகளின் முக்கிய தேர்தல் வாக்குறுதியே "மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும்" என்பது. அதிலிருந்தே உங்களுக்குப் புரியும் இதன் முக்கியத்துவம் என்னவென்பது.* *நம் செவிலியர்களில் இன்னும் எத்தனையோ வேலு நாச்சியார்களும், ராணி லட்குமிபாய்களும், ஜான்சி ராணிகளும், ராணி மங்கம்மாக்களும், ஏன் எலிசபெத் மகாராணிகளும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தும் பொழுதுதான் அவர்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு கொடுத்துப...

Part 7... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

கடைசி ஒரு வாரம் நான் ரொம்ப பிசி. இதோ ஜெப்.., நர்ஸஸ் ஹோமிற்கு வந்து ஒரு வாரத்தில் ஜெப்பின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இளம் ஸ்டாப்கள் .. குறிப்பாக பெண்கள், நிறைய சிரமம் அடைந்தார்கள். அவர்களிடம் ஜெப் ஒத்துப்போகவில்லை. ஆயிரம் இருந்தாலும் வயது குறைந்த புதிய நபர்கள் , அவர்கள் முன்னிலையில். ..தன்னை ஆடைகலைய கூறும்போது மனரீதியாக சஞ்சலம் அடைந்தார். ஆகவே பெரும்பாலும் ஆண் ஊழியர்களே அவரை கவனித்தோம். நாம் கேட்பதற்கு சம்பந்தமே இல்லாத பதில்களை கூற ஆரம்பித்தார். Incoherent speech due to poor cognition. பெரும்பாலும் அவருடன் .. அவரும் க்வென்னும் வாழ்ந்த இளமை பருவ நிகழ்வுகளை பற்றி கேட்டால் ஆர்வத்துடன் பதிலளிப்பார். அந்த யுத்தி பல நேரங்களில் உதவியது. 90 வயதிலும்.., அவரது 16 -19 வயது காதல் பயண நினைவுகள் எள்ளளவும் பிசிராமல் அப்படியே இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். முதன்முதலில் அவரிடம் க்வென் அன்பை சொன்னது., இவர் க்வென்னிடம் கல்யாணம் பண்ண கேட்டது... அப்ப்போது அவர்கள் இருந்த இடம்., அணிந்து இருந்த ஆடை.. எல்லாம் சொல்லுவார். டோணி (அத்தோணி - அவர்களது மகன்) பிறந்த தினம்., வளர்ப்பு ப...

part 3....சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

Image
*செவிலிய மறுமலர்ச்சி தொடர் : *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 4 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் தனிநிலை விதி அமைப்பில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புகளைப் பற்றி பார்த்தோம்.. இன்று சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை குறித்தும், நிர்வாகம் குறித்தும் பார்க்கவிருக்கிறோம்.. *7)* *சங்கத்தின் ஆண்டு :* நாட்காட்டி ஆண்டுதான் (CALENDAR YEAR) நம் சங்கத்தின் ஆண்டுமாகும். சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு சங்க ஆண்டின் இறுதியிலும், சங்கத்தின் வரவு செலவை  தணிக்கை செய்து, அதன் விவரத்தை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். *8)* *உறுப்பினர் சேர்க்கை :* *>* தமிழக அரசின் கீழ் பணியாற்றும், முறையான பயிற்சி பெற்ற அரசு செவிலியர்கள் (BOTH GAZETTED & NON GAZETTED) அனைவரும் சங்கத்தில் உறுப்பினர்களாக இணைய தகுதியுடையவர்களாவர். சங்கத்தில் உறுப்பினராக இணைவதற்கு அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள உறுப்பினர் படிவத்தை (இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது) பூர்த்தி செய்து, அதனுடன் நிர்ணயிக்கப்பட்டுள...

Part 6... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை என் 14 வருட டிமெண்ஸியா நர்ஸ் வாழ்க்கையில்., மறக்க முடியாத ...., தன்நிலை மறந்த .., சில நபர்களின் .., வாழ்ந்து மறைந்த வாழ்க்கையை தொகுத்து பகிரலாம் என்று நினைக்கின்றேன். பகிரலாமா?!...... டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை. (Living with dementia) சராசரியா எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அரசாங்க வேலை. , நல்ல இடத்துல கல்யாணம். ., அறிவான குழந்தைகள்.., வீடு., அதுக்கு முன்னாடி போர்டிக்கோ வுல வண்டி., குழந்தைங்க கல்யாணம்., பேரக்குழந்தைங்க. ரிட்டையர்டு ஆயி பென்சன். அடுத்து நிம்மதியான வாழ்க்கை. இது தான் எல்லாரும் நினைக்கிறது. அதில் எல்லா பகுதியவும் திட்டம் போட்டு வெற்றி பெற்றாலும்... ரிட்டயர்ட் ஆன பிறகு வரும் வாழ்க்கையை .... “இனிமே என்ன இருக்கு” என்ன எண்ண ஓட்டத்துல சரியா திட்டம் போடாம., அல்லல் படுவது .., அந்த நிலைக்கு வரும் போது தான் உணரமுடியும். அப்போ வர்ற எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக்கூட யாரும் இருக்க மாட்டாங்க. இப்பலாம்., அடுத்தவங்க சொல்லுறத கவனிச்சு., கிரகிச்சு... பதில் சொல்லக்கூட பொறுமை இருக்காது. இதில் வயதானவர்கள் பேசுனாலே “வழவழன்னு பேசாதீர்கள். என்ன மேட்டர்ன...

செவிலியர் உறுதிமொழி

*நன்றி*:-  *Tnnurse.org* ~~~~~~~~~~~~~~~~ *வரக்கூடிய நமது செவிலியர்தினத்தில் நாம் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுக்கப்போவது (வழக்கம்போல் ஆங்கிலத்தில்)உறுதி....அதனை நமது தாய் மொழித்தமிழில் எடுத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்*....) *செவிலியர் உறுதிமொழி* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 *.“நான்* *இந்த* *அவையில்* *இறைவன்* *முன்னிலையில்* *எனது வாழ்க்கையை தூய்மையாகவும்* *எனது தொழிலை அர்ப்பணிப்புடனும்* *நடத்தி செயல்படுவேன் என* *உறுதி எடுக்கிறேன்*      *எனக்கோ எனது* *செவிலிய பெயருக்கோ* *களங்கம் விளைவிக்கும்* *அனைத்து செயல்களில் இருந்தும்* *நான் விலகி* *இருப்பேன்*     *பிணியாலர்களுக்கு* *எந்தவிதமான* *கெடுதலையும்* *விளைவிக்க கூடிய* *மருந்தினை* *கொடுக்கவோ* *அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்* *எனது சக்திக்கு உட்பட்டு* *எனது செவிலிய* *பணியின் தரத்தை* *நிலைக்க செய்யவும்* *அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்* *நான் பாடுபடுவேன்* *நான் பணியில்* *இருக்கும் பொழுது* *எனக்கு தெரிய வருகிற* *பிணியாலர்களின்* *தனிப்பட்ட மற்றும் குடும்பம...

INTERNATIONAL NURSES DAY THEME...

*INTERNATIONAL NURSES DAY THEME* ~~~~~~~~~~~~~~~~~ *Every year theme of the International Nurses Day celebration from 1988 to 2018 is mentioned below*: The theme of 1988 was “Safe Motherhood”. The theme of 1989 was “School Health”. The theme of 1990 was “Nurses and Environment”. The theme of 1991 was “Mental Health – Nurses in Action”. The theme of 1992 was “Healthy Aging”. The theme of 1993 was “Quality, costs and Nursing”. The theme of 1994 was “Healthy Families for Healthy Nation”. The theme of 1995 was “Women’s Health: Nurses Pave the Way”. The theme of 1996 was “Better Health through Nursing Research”. The theme of 1997 was “Healthy Young People = A Brighter Future”. The theme of 1998 was “Partnership for Community Health”. The theme of 1999 was “Celebrating Nursing’s past, claiming the future”. The theme of 2000 was “Nurses – Always there for you”. The theme of 2001 was “Nurses, Always There for You: United against Violence”. The theme of 2002 was “Nurses Alw...

part 2..சங்கத் தனிநிலை விதியும்....செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்.....திரு.S.பால்பாண்டி

*செவிலிய மறுமலர்ச்சி தொடர் :* *சங்கத் தனிநிலை விதியும்(BYLAW), எனது கண்ணோட்டத்தில் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களும்..* *அத்தியாயம் 3 :* சென்ற அத்தியாயத்தில் சங்கத்தின் *1) பெயர், 2) இலச்சினை, 3) வரையறுப்பு, 4) அமைவிடம், 5) சங்கத்தின் நோக்கங்கள்* ஆகியன குறித்து பார்த்தோம். இன்றைய பதிவில் அதன் தொடர்ச்சியாக சங்கத் தனிநிலை விதியில் மாநில, மாவட்ட மற்றும் நகர கிளைச் சங்கத்தின் நிர்வாக கட்டமைப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். *6) தனிநிலை விதி அமைப்பு:* *மாநில அளவிலான நிர்வாகக் கட்டமைப்பு :* மாநில செயற்குழுவானது கீழ்க்காணும் நபர்களை உள்ளடக்கியுள்ளது.. *அ) தலைவர்.* *ஆ) துணைத் தலைவர்கள்- 13* (ஒருவர் சென்னை நகருக்கும், ஏனைய 12 பேர் மற்ற மாவட்ட கிளைச் சங்கங்களுக்கும் பொறுப்பாளர்களாவர்) *(1960 ல் நம் சங்கத் தனிநிலை விதி உருவாக்கப்பட்ட பொழுது, சென்னையுடன் சேர்த்து மொத்தமே 13 மாவட்டங்கள்தான். ஆனால் இன்று 32 மாவட்டங்கள். அதன்படி பார்த்தால் நமக்கு 32 மாநில துணைத் தலைவர்கள் தேவை. முன்னோர்கள் நம் சங்கத் தனிநிலை விதியிலும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். கட...

உலக செவிலியர் நாள்..புளோரன்ஸ் நைட்டிங்கேல் வரலாறு......

Image
*உலக செவிலியர் நாள்* ~~~~~~~~~~~~~~~~~  (*International Nurses Day*) *உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது*.  செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும்...

இந்தியாவில் செவிலியம் - வரலாற்றுப் பார்வை....

*இந்தியாவில் செவிலியம்* ~~~~~~~~~~~~~~~ *ஓர் வரலாற்றுப் பார்வை* ~~~~~~~~~~~~~~~~ *இந்தியாவில் செவிலியம் என்பது, இந்திய நாட்டில் நோயாளிகளைக் கவனித்துப் பேணுவதற்கான துறையைக் குறிக்கும். பழங்கால இந்திய ஆவணங்கள் செவிலியப் பணியின் கொள்கை முறைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாக விளங்குகின்றன. முதலில் இளைஞர்களே செவிலியப் பணியில் சேர்ந்தனர், பின்னர் மகப்பேற்றுத் துறையில் பெண்கள் சேர்க்கப்பட்டனர்*. *இந்திய நாட்டில் நிலவி வந்த ஜாதி முறைகள், கல்வி அறிவின்மை, பெண்களின் பின் தங்கிய நிலைமை, சம உரிமை அற்ற அரசியல் ஆகிய காரணங்களால் செவிலியத்துறை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருந்தது*. *1664 இல் கிழக்கிந்திய கம்பேனிதனது வீரர்களுக்காக சென்னையில்உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில்ஒரு வீட்டில் முதல் மருத்துவ மனையை ஆரம்பித்தது. இந்த மருத்துவமனையில் பணிபுரிய இலண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்தது செவிலிய சகோதரிகள் வந்தனர்*. *1797* *இல் சென்னையில் உள்ள ஏழைகளுக்காக* *மருத்துவர் ஜான் அண்டர்வுட் என்பவரின் ...

மணிமொழியனின் செவிலிய வார மொழி....

*♻மணிமொழியனின்♻*  *❇செவிலிய வார மொழி💉✍* 👩🏻‍⚕மருத்துவத்தின் விவிலியம்📖 *💪எங்கள் செவிலியம்💉* 🚑ஆம்னிய திரவம் தோய்ந்த செங்குருதி🌡 👶🏻பிறந்த குழவி👶🏻 *🤰🏻தாய்க்கு முன்* பச்சிளம் குழந்தையை *அணைப்பதும்🤱🏻* ஆர்ப்பரிப்பதும்💃🏻 *💪எங்கள் செவிலியம்💉* 😨எத்தனை கடுமம்😠 🤬எத்தனை வன்மம்😡 🤫அத்தனையும் தாங்கி💪 🕊வெண்புறாவாய் *பறந்து🕊* 🤒சிகிச்சையில் *சிறந்து💊* 😔நோய்க்கவலை *மறந்து😊* *🛌🏻பிணியாளரை🛌🏻* *🕺🏻நலம் பணியாளராய்* மாற்றும்🕺🏻 *💪எங்கள் செவிலியம்💉* 🤕தொற்றா நோய்களும்😤 🤮தொற்றும் நோய்களும்🧐 கொண்ட நோயாளியை🛌🏻 👨‍👩‍👧‍👦குடும்பத்தினரே தொட மறுத்தாலும்😏 🙅🏻‍♂மறுக்காமல் 🙂 🤦🏻‍♂வெறுக்காமல்😊 😜அருவருக்காமல்😝 🤝தொட்டுத்தொட்டு சிகிச்சை தரும்🤒 சகிப்புத் தன்மை😊 *💪எங்கள் செவிலியம்💉* 🌌இரவுப்பணியில்🏥 😁சில ஆண்மையின் *தாக்கம்😱* 🤬வன்மையின் *நோக்கம்🗣* 🙍🏻‍♀தாயின் பிரிவில் தன் குழந்தையின் *ஏக்கம்😢* 🤲அத்தனையும் இருந்தாலும் 🚑 மருத்துவ சேவையே *நோக்கமாய்💉🗡💊* *💪எங்கள் செவிலியம்💉* 👨...