Part 1...Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....
நான் ... அருள்நீதிதேவன். ஆண் செவிலியர். இங்கிலாந்து. ஒரு நர்ஸா... இங்க எப்புடி வாழ்க்கை போகுதுன்னு பகிர்த்துகிறதுக்கு ஆசை படுறேன். என்ன ., என்ன.. இழப்புகள், என்ன சாதிச்சோம்னு வெளியில சொன்னா.. மனசுக்கு ஒரு இதம். டிபிக்கல் நர்சிங் குடும்பம். என்னவெல்லாமோ ஆகணும்னு கனவுகண்டாங்க பெத்தவுங்க. எனக்குன்னு எந்த கனவும் இருந்தது இல்ல. ஆனா நர்சா மட்டும் ஆகக்கூடாதுன்னு நெனச்சேன். கம்ப்யூட்டர்ல எம்பில் வர பண்ணினாலும் ., கடைசியில வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தது “செவிலியம்” தான். நர்சிங்சேருர வரைக்கும் நான் வாழ்க்கைல கஷ்டம்னு ஒரு பகுதியை பார்த்தது இல்ல... அதுக்கு அப்புறம் நடந்ததெல்லாம் தினமும் ஒரு படிப்பினை. நான் .... எனக்குன்னு பல அவதாரம் இருக்கோ இல்லையோ.... அத சொல்லி பீத்திக்க விரும்பல. ஆனா “ நான் செவிலியன்” னு சொல்லிக்கிறதுல .., ஏகமனதாக கர்வப்படுகிறேன்... இங்கிலாந்துல வேல பார்குறதுனால .., இவன் புத்திசாலையோ.., படிப்பாளியோ ன்னு நினைக்காதீங்க. நான் ஆவரேஜ் மாணவன் தான். அதுக்காக திறமை இல்லைன்னு இல்ல.. அத உபயோகிக்கத் தெரியாத சோம்பேறி. அப்புறம் எப்புடின்னு கேக்குறீங்களா?.. அஜித் வசனத்துக்கு ஆப்போ...