Part 7... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....
கடைசி ஒரு வாரம் நான் ரொம்ப பிசி. இதோ ஜெப்.., நர்ஸஸ் ஹோமிற்கு வந்து ஒரு வாரத்தில் ஜெப்பின் மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள். இளம் ஸ்டாப்கள் .. குறிப்பாக பெண்கள், நிறைய சிரமம் அடைந்தார்கள். அவர்களிடம் ஜெப் ஒத்துப்போகவில்லை. ஆயிரம் இருந்தாலும் வயது குறைந்த புதிய நபர்கள் , அவர்கள் முன்னிலையில். ..தன்னை ஆடைகலைய கூறும்போது மனரீதியாக சஞ்சலம் அடைந்தார். ஆகவே பெரும்பாலும் ஆண் ஊழியர்களே அவரை கவனித்தோம். நாம் கேட்பதற்கு சம்பந்தமே இல்லாத பதில்களை கூற ஆரம்பித்தார். Incoherent speech due to poor cognition. பெரும்பாலும் அவருடன் .. அவரும் க்வென்னும் வாழ்ந்த இளமை பருவ நிகழ்வுகளை பற்றி கேட்டால் ஆர்வத்துடன் பதிலளிப்பார். அந்த யுத்தி பல நேரங்களில் உதவியது. 90 வயதிலும்.., அவரது 16 -19 வயது காதல் பயண நினைவுகள் எள்ளளவும் பிசிராமல் அப்படியே இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். முதன்முதலில் அவரிடம் க்வென் அன்பை சொன்னது., இவர் க்வென்னிடம் கல்யாணம் பண்ண கேட்டது... அப்ப்போது அவர்கள் இருந்த இடம்., அணிந்து இருந்த ஆடை.. எல்லாம் சொல்லுவார். டோணி (அத்தோணி - அவர்களது மகன்) பிறந்த தினம்., வளர்ப்பு ப...