Part 5... Overseas Nursing குறித்து... அருள்நீதிதேவன்....
சம்பளம். வரி. நேஷனல் இன்ஸயூரன்ஸ் இங்க, சம்பளம்... மணிக்கணக்கில் தான் அடிப்படை அளவு நிர்ணயிக்கப்படும். சராசரியாக.,வாரத்திற்கு 37.5 மணி நேரம் என்பது முழுநேர வேலை நேரம். 18 -24 மணி நேரம் - பகுதி நேர வேலை. அதற்கும் கீழ் என்றால் தற்காலிக பகுதி நேர வேலை. (Bank shift). விடுப்புகள். நமது நிர்ணயிக்கப்பட்ட வார வேலை நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வருடத்திற்கு விடுப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த வேலை என்றால்., 7 1/2 வாரங்கள் (அரசாங்க விடுமுறை உட்பட) .., தனியார் என்றால்., குறைந்தது 5.6 வாரங்கள். பெரும்பாலும் 4 வாரங்களுக்கு முன் விடுப்பு பதிவிட்டுக்கொள்ளலாம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும். அரசு சார்ந்த வேலைக்கு sick leave எடுத்தால்., முதல் 3 மாதங்களுக்கு முழு சம்பளம் கிடைக்கும். அடுத்த 3-6 மாதங்களுக்கு 1/2 சம்பளம். (இடத்திற்கு ஏற்ப மாறுபடும்). 9 மாதத்திற்கு மேல் ., company based occupational therapist (mostly a doctor) நம்ம செக். பண்ணிட்டு ., வேலைக்கு திரும்பலாமா, இல்லையா என்று முடிவு செய்வார்கள். பிரசவகால விடுமுறையாக 3rd trimester ல இருந்து குழந்தை பிறந்த 9 மாதங்கள் வ...